போதை இலைகள் அடங்கிய குப்பைகளை ஏற்றிவந்த லாரி..வளைத்து பிடித்த அதிகாரிகள் – வெளிநாட்டு ஓட்டுநர் கைது

kratom-ICA-CNB
CNB

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக மலேசிய பதிவு செய்யப்பட்ட லாரியில் சுமார் 5.8 கிலோகிராம் kratom இலைகள் கொண்ட குப்பைப் பையை ஜனவரி 3ஆம் தேதி, குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகள் (ICA) கண்டுபிடித்தனர்.

சிங்கப்பூரில் பல இடங்களில் போதைப்பொருள் சந்தேகத்தின்பேரில் கடந்த ஜன. 3 மற்றும் ஜனவரி 4 ஆகிய தேதிகளில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பாதசாரி (வீடியோ): ஆபத்தான முறையில் காரை இயக்கிய ஓட்டுனரின் உரிமம் உடனடி ரத்து

ஜனவரி 3 அன்று, சரக்குகளை அனுப்பும் லாரியின் ஸ்கேன் செய்யப்பட்ட படங்களில் முரண்பாடுகளை ICA அதிகாரிகள் கவனித்தனர்.

அதை தொடர்ந்து சோதனை செய்ததில், லாரியின் பேட்டரி பெட்டியில் 22 மூட்டைகளில் 6 கிலோ எடையுள்ள kratom இலைகள் இருந்த குப்பை பை கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை அடுத்து, 33 வயதான மலேசிய ஓட்டுநர் உடனடியாக கைது செய்யப்பட்டு, மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு (CNB) விசாரணைக்காக அனுப்பப்பட்டார்.

அதே நாளில் நடத்தப்பட்ட தொடர் சோதனை நடவடிக்கையில், பாண்டன் லூப் அருகே 33 வயது சிங்கப்பூரர் மற்றும் 40 வயது மலேசியர் ஒருவரையும் CNB அதிகாரிகள் கைது செய்தனர்.

மேலும், 27 வயதான மலேசிய இளைஞரும் அதன் அருகில் கைது செய்யப்பட்டார்.

சிங்கப்பூரில் இருந்து வந்தவர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதி – தொடரும் பரிசோதனை