கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டம் ரத்து: 5 பேருக்கு நீதிமன்றம் கெடு

Malaysia KL-Singapore HSR
Malaysia KL-Singapore HSR (Photo: MyHSR)

கோலாலம்பூர்-சிங்கப்பூர் இடையேயான அதிவேக ரயில் (HSR) திட்டம் கடந்த 2021ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

அதனை இரு நாடுகளின் பிரதமர்களும் கூட்டு அறிக்கையில் அதே ஆண்டு ஜனவரியில் தெரிவித்தனர்.

லிட்டில் இந்தியா ரயில் நிலையத்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த நபர் – மடக்கி பிடித்த போலீஸ்

இந்நிலையில் அது குறித்து மலேசிய உயர்நீதிமன்றத்தில் வழக்கில் தொடுக்கப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதிகள் அதற்கான தற்காப்பு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று 5 பேருக்கு உத்தரவிட்டனர்.

அந்த 5 நபர்களில் மலேசிய நாட்டின் முன்னாள் பிரதமர்கள் டாக்டர் மகாதீர் முகமது மற்றும் திரு. முகைதீன் யாசின் ஆகியோர் அடங்குவர்.

இந்த மாத இறுதிக்குள் அவர்கள் அனைவரும் தற்காப்பு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்க்காக கடந்த 2016ஆம் ஆண்டு, சிங்கப்பூர்-மலேசியா ஆகிய இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்துகொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் TOTO: $12 மில்லியன் ஜாக்பாட் பரிசுத் தொகை – அலைமோதிய கூட்டம்; இன்று முடிவு

கோலாலம்பூர்-சிங்கப்பூர் இடையேயான அதிவேக ரயில் (HSR) திட்டம் ரத்து