தொழிலாளர் தினத்தையொட்டி, மே 7- ஆம் தேதி திறக்கப்படுகிறது இஸ்தானா!

Photo: Istana Open House

இஸ்தானா மாளிகையில் உள்ள சிங்கப்பூர் அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த ஏப்ரல் 26- ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேலும் தளர்த்தப்பட்டத்தைக் கருத்தில் கொண்டும், தொழிலாளர் தினத்தையொட்டியும் ஹரி ராய புசா இஸ்தானா ஓபன் ஹவுஸ் (Hari Raya Puasa Istana Open House) வரும் மே 7- ஆம் தேதி அன்று காலை 09.00 AM முதல் மாலை 05.00 PM மணி வரை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அனுமதிக்கப்படுவர்.

சிங்கப்பூர் MRT ரயிலில் சிக்கி தவித்த 50 பயணிகள் – என்ன நடந்தது?

இஸ்தானாவைப் பார்வையிட விரும்பும் பார்வையாளர்கள் இனி நுழைவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டியதில்லை. இஸ்தானா மைதானத்திற்குள் நுழைவதற்கும் கட்டணம் ஏதும் இல்லை. இஸ்தானா ஓபன் ஹவுஸ் திறக்கும் நேரத்தில் பிரதான கட்டிடத்திற்குள் (Main Building) நுழைய விரும்பும் பார்வையாளர்கள், அந்த இடத்திலேயே நுழைவுச் சீட்டுகளை வாங்கி கொள்ளலாம். நான்கு வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்களுக்கும், நிரந்தரவாசிகளுக்கும் 2 சிங்கப்பூர் டாலர் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர்வாசி அல்லாதவர்களுக்கு 4 சிங்கப்பூர் டாலர் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நான்கு வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் அனுமதி இலவசம். வசூலிக்கப்படும் கட்டணங்கள் அனைத்தும் ‘President’s Challenge’ மூலம் தொண்டு நிறுவனங்களுக்கு செலுத்தப்படும்.

அதிரடியாக களமிறங்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்-இந்தியாவிற்கான பயணிகளின் அளவை அதிகரிக்கும் திட்டம்

நடைமுறையில் உள்ள பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளுக்கு ஏற்ப, பார்வையாளர்கள் இஸ்தானாவிற்குள் இருக்கும் போது எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். பாதுகாப்பான தொலைதூர தூதர்கள், அனைத்து பாதுகாப்பான நிர்வாக நடவடிக்கைகளையும், பார்வையாளர்கள் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய உதவுவார்கள். இஸ்தானா பார்வையாளர்களின் ஒத்துழைப்பையும், புரிதலையும் நாடுகிறது.” இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.