வாயக்கட்டி, வயித்தக்கட்டி சம்பாதிக்கிறோம்.. சிங்கப்பூரில் வெளிநாட்டு பணியாளர்களை குறி வைக்கும் மோசடி – போலீசார் வெளியிட்ட எச்சரிக்கை!

Singapore oct changes jobs workers electricity
Pic: Julio Etchart

சிங்கப்பூரில் மோச­டியாளர்களின் வலையில்,  வெளி­நாட்டு ஊழி­யர்­களும், வீடுகளில் பணிபுரியும் பெண்களும் விழுவதாக காவல்­துறை தெரி­விக்­கிறது.

கடந்த ஆண்டில் மாத்திரம், 3,181 வெளி­நாட்டு ஊழி­யர்­கள் மோச­டி­யில் சிக்கி பணத்தை பறிகொடுத்தனர். 2020 ஆம் ஆண்­டு வாக்கில் இந்த எண்ணிக்கை 1,965 ஆக இருந்­தது. மற்ற ஊழியர்களைப்போலவே வீடுகளில் பணியாற்றும் பெண்கள் 357 பேர் ஏமாந்து போயினர்.

இந்த எண்­ணிக்கை 2020ல் 216 என்ற அளவில் தான் இருந்தது. ஏமாற்றப்படுவது மட்டுமின்றி சேமிப்பு தொகை மொத்தமாக மோசடியில் இழந்து விடுகின்றனர்.

மோசடியாளர்கள் கடைபிடிக்கும் உத்­தி­கள், தில்­லு­முல்­லு­கள் பற்றி வெளி­நாட்டு ஊழி­யர்­கள் புரிந்து­கொள்ள வேண்­டும்.

அதற்காக சில தொண்டு நிறுவனங்களும், தங்­கு­வி­டுதி நடத்து­வோ­ரும் முயற்­சி­களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் கார­ண­மாக ஏற்­பட்ட பணச் சிர­மங்­களால், ஃபேஸ்புக்­கில்  வரும் போலியான விளம்பரங்களை பார்த்து ஏமாந்து விடுகின்றனர்.

சிங்­கப்­பூ­ரில் 246,300 வீட்டு வேலை செய்யும் பெண்கள் பணியாற்றுகின்றனர். கட்­டு­மா­னம், கடல்­துறை, தொழில்துறை ஆகி­ய­வற்­றில் 318,400 வெளிநாட்டு ஊழி­யர்­கள் பணி­யாற்­றி­யதாக மனி­த­வள அமைச்சகம் தெரி­விக்­கிறது.

வேலை தொடர்­பான மோசடி, இணைய வர்த்­தக மோசடி­கள், மின்­னஞ்­சல் மோச­டி­கள் ஆகி­ய­வையே வெளி­நாட்டு ஊழி­யர்­களை குறி வைத்து மேற்கொள்ளப்படுகின்றன.

மின்­னஞ்­சல் மோசடி­, இணை­யக்காதல் மோச­டி­கள், கடன் மோச­டி­களில் வீடுகளில் பணியாற்றும் பெண்கள் அதிகம் சிக்குகின்றனர்.

மோச­டி­களை எதிர்­நோக்­கும் ஊழி­யர்­கள், தங்­கள் முத­லா­ளி­களை அல்­லது வேலை நிய­மன நிறு­வ­னங்­களை உத­விக்கு நாட வேண்­டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.