சிங்கப்பூருக்கு மீண்டும் வந்துள்ள லாலு பிரசாத் யாதவ்!

Video Crop Image

ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004- ஆம் ஆண்டு முதல் 2009- ஆம் ஆண்டு வரை மத்திய ரயில்வேத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது, ஐஆர்சிடிசியின் இரண்டு ஓட்டல்களை பராமரிக்க தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

125 கிலோ எடையை தூக்கி சாதனை படைத்த 63 வயதான அமைச்சர் க.சண்முகம்

அதற்கு கைமாறாக, சம்மந்தப்பட்ட நிறுவனம், லாலுவுக்கு மூன்று ஏக்கர் நிலத்தை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, அவரது மகனும் தற்போதைய பீகார் மாநில துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

அத்துடன், லாலு பிரசாத் யாதவ் மீது மாட்டுத்தீவனம் ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்த நிலையில், அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், லாலுவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, அவருக்கு கடந்த 2018- ஆம் தேதி அன்று டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது. இதனால் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் நீதிமன்றம் வசம் இருந்தன.

இந்த நிலையில், உயர் சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு செல்ல அனுமதி கோரியும், தனது பாஸ்போர்ட்டைத் திரும்ப ஒப்படைக்கக் கோரியும், லாலு பிரசாத் யாதவ் டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது, மனுவை விசாரித்த நீதிபதி கீதாஞ்சலி கோயல், வரும் அக்டோபர் 10- ஆம் தேதி முதல் அக்டோபர் 24- ஆம் தேதி வரை சிங்கப்பூருக்கு சென்று சிகிச்சைப் பெற்று திரும்ப அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

ட்விட்டர், மெட்டாவைத் தொடர்ந்து ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யும் HP நிறுவனம்!

இதைத் தொடர்ந்து, லாலு பிரசாத் யாதவை அவரது குடும்பத்தினர் சிங்கப்பூருக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிக்சை செய்யுமாறு பரிந்துரைத்தனர். இதையடுத்து, கடந்த அக்டோபர் 23- ஆம் தேதி அன்று லாலு பிரசாத் யாதவ், டெல்லி திரும்பினார். அதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள தனது மூத்த மகள் மிசா பார்தியின் வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்தார்.

இந்நிலையில், சிங்கப்பூரில் வசிக்கும் லாலு பிரசாத் யாதவின் இளைய மகள் ரோஹிணி ஆச்சார்யா தனது தந்தைக்கு தனது சிறுநீரகத்தை தான் தானமாக வழங்க உள்ளதாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். பின்னர், ரோஹிணி ஆச்சார்யாவுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவரின் சிறுநீரகம் லாலு பிரசாத் யாதவுக்கு ஒத்துப்போகக் கூடியதாக இருந்தது.

இதையடுத்து, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக லாலு பிரசாத் யாதவ் நேற்று (27/11/2022) காலை மீண்டும் சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருடன் மனைவி, குடும்பத்தினர் உள்ளிட்டோரும் சிங்கப்பூர் சென்றுள்ளனர். சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வீல் சாரில் வெளியே வந்த லாலு பிரசாத் யாதவின் காலைத் தொட்டு வணங்கினார் அவரது இளைய மகள் ரோஹிணி ஆச்சார்யா.

வேலையில் இருந்து நீக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு – ஊழியர்களின் வயது 35க்கும் குறைவு என்பது அதிர்ச்சி தகவல்

இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ரோஹிணி ஆச்சார்யா, ” என் தந்தைக்காக என்னால் எதையும் செய்ய முடியும். எல்லாம் நல்ல படியாக நடைபெற இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். உங்கள் எல்லோருக்காகவும் குரல் கொடுக்க எனது தந்தை உடல்நலம் பெற்று திரும்ப வருவார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாரத்தில் சிங்கப்பூரில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் லாலு பிரசாத் யாதவுக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை நடைபெறவுள்ளது.