லேப்டாப் சார்ஜருக்குள் தங்கத்தைக் கடத்தி வந்த பயணி… அதிகாரிகள் அதிர்ச்சி!

Photo: Trichy Customs

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய், அபுதாபி, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கத்தைக் கடத்தி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் மற்றும் திருச்சி மண்டல சுங்கத்துறை அதிகாரிகள் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் தீவிர சோதனையை நடத்தி வருகின்றனர்.

சிங்கப்பூரர்கள் அதிகம் செல்ல விரும்பும் நாடுகள் எவை?- கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியல்!

அந்த வகையில், சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணி ஒருவரிடம் சந்தேகத்தின் பேரில், வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் அவரின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது, அவர் வைத்திருந்த லேப்டாப் சார்ஜரையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், அவர் தங்கத்தைக் கடத்தி வந்தது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, லேப்டாப் சார்ஜரில் இருந்த தங்கத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

‘குறைந்த கட்டணத்தில் திருச்சியில் இருந்து சிட்னிக்கு விமான சேவை’- ஸ்கூட் ஏர்லைன்ஸ் அதிரடி அறிவிப்பு!

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூபாய் 30.5 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.