லாட்வியா துணை பிரதமர், அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனுடன் சந்திப்பு!

Photo: Minister Vivian Balakrishnan Official Facebook Page

நான்கு நாள் அறிமுகப் பயணமாக கடந்த டிசம்பர் 2- ஆம் தேதி அன்று லாட்வியா நாட்டின் துணை பிரதமரும், அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சருமான டாக்டர் ஆர்ட்டிஸ் பப்ரிக்ஸ் (Latvian Deputy Prime Minister and Minister for Defence Dr Artis Pabriks) சிங்கப்பூருக்கு வந்துள்ளார். அதைத் தொடர்ந்து, நேற்று (03/12/2021) பிற்பகல் சிங்கப்பூரின் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனைச் சந்தித்துப் பேசினார்.

மனைவி தவறான நிலையில் இருக்கும் அந்தரங்கப் படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட ஆடவருக்கு சிறை

கொரோனா பரவல், கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள், பொருளாதாரம், பிராந்தியங்களில் நிலவும் சூழல், டிஜிட்டல் தொழில்நுட்பம், இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது உள்ளிட்டவைக் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

லாட்வியா துணை பிரதமருடனான சந்திப்பு குறித்து சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “சிங்கப்பூர் திரும்பிய லாட்வியா துணைப் பிரதமரும், பாதுகாப்புத்துறை அமைச்சருமான டாக்டர் ஆர்ட்டிஸ் பப்ரிக்ஸை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

சிங்கப்பூரில் பழைய காகிதங்களுக்கு பணம் வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டது!

டாக்டர் பப்ரிக்ஸ் சிங்கப்பூருக்கு வருவது புதிதல்ல. மேலும் 2007- ல் அவர் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது உத்தியோகபூர்வ விஜயம் உட்பட பல சந்தர்ப்பங்களில் எங்களைச் சந்தித்துள்ளார். டாக்டர் பப்ரிக்ஸும், நானும் பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் மற்றும் கொரோனா தொற்றுநோயிலிருந்து நமது இரு நாடுகளும் எவ்வாறு வலுவாக வெளிவருவது என்பது குறித்தும் சிறந்த பரிமாற்றம் இருந்தது.

டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் எங்கள் இரு பிராந்தியங்களுக்கிடையேயான இணைப்பை எளிதாக்குதல் உள்ளிட்ட ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தக்கூடிய பகுதிகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம். எங்கள் பிராந்தியத்துடன் ஈடுபாட்டை அதிகரிக்க லாட்வியாவின் ஆர்வத்தை நான் வரவேற்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் புதிதாக 766 பேருக்கு கொரோனா பாதிப்பு!

நவம்பர் 5- ஆம் தேதி வரை சிங்கப்பூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் லாட்வியா துணை பிரதமர் கலந்துக் கொள்ளவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.