பகுதி நேரமாக வீட்டைச் சுத்தம் செய்யும் ஊழியர்களின் கவனத்திற்கு….சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

Photo: Ministry Of Manpower, Singapore

சிங்கப்பூரில் பகுதி நேர வீட்டு வேலைக்கான விரிவுப்படுத்தப்பட்டத் திட்டத்தை மனிதவள அமைச்சகம் (Ministry Of Manpower, Singapore) இன்று (மார்ச் 15) தொடங்கி வைக்க உள்ளது. இந்த திட்டத்தின் படி, சிங்கப்பூரில் பகுதி நேரமாக வீட்டைச் சுத்தம் செய்யும் ஊழியர்கள் அந்த வீட்டில் உள்ள குழந்தைகளையும், முதியவர்களையும் கவனித்துக் கொள்ளும் சேவைகளையும் செய்வர்.

திருப்பி பெறப்பட்ட சுமார் 6,00,000 TraceTogether கருவிகள்

இந்த திட்டத்தில் இணையும் நிறுவனங்கள் சிங்கப்பூரில் உள்ள குடும்பங்களுக்குத் தேவையான சேவைகளை வழங்க ஏதுவாக, இன்னும் அதிகமாக ஊழியர்களைப் பணிக்கு அமர்த்தலாம். இந்த திட்டத்தில் சேர 25 நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சகம் கூறியுள்ளது.

இதற்கு முன்பு, அந்த திட்டத்தில் வீட்டைச் சுத்தம் செய்வது, கார் கழுவுவது உள்ளிட்ட சேவைகள் மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மற்றும் இந்திய புத்தாண்டிற்கான நிகழ்ச்சி நிரல் குறித்த பட்டியலை வெளியிட்டது ‘லிஷா’!

மனிதவள அமைச்சகத்தின் இத்தகைய அறிவிப்பால், வெளிநாட்டு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அத்துடன், வீட்டைச் சுத்தம் செய்யும் பணிகளில் வெளிநாட்டு ஊழியர்கள் அதிகளவில் பணியமர்த்தப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.