லாரன்ஸ் வோங் தற்காலிக பிரதமராக செயல்படுவார் என அறிவிப்பு!

lawrence wong

 

 

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்- க்கு இன்று (ஜூன் 01) மீண்டும் கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் ஆலோசனை படி, பிரதமர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு ஓய்வெடுத்து வருகிறார். இந்த தகவலை அவர் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இறந்த நிலையில் கிடந்த ஆடவர் உடல்… “ஒரு வாரம் வரவில்லை”- ஊழியர்கள் தேடியதை அடுத்து கண்டெடுப்பு

இந்த நிலையில், சிங்கப்பூரின் தற்காலிக பிரதமராக நிதியமைச்சரும், துணைப் பிரதமருமான லாரன்ஸ் வோங் செயல்படுவார் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. சிங்கப்பூருக்கு இன்று (ஜூன் 01) அரசுமுறைப் பயணமாக வருகை தரவுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனிஸை (Prime Minister of Australia Anthony Albanese) நேரில் சென்று வரவேற்கிறார் தற்காலிகப் பிரதமர் லாரன்ஸ் வோங்.

அதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் பிரதமர்கள், இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பு, பொருளாதாரம், வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்டவைக் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

பின்னர், ஜூன் 2- ஆம் தேதி அன்று சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்பின் அழைப்பின் பேரில் இஸ்தானா மாளிகைக்கு செல்லும் ஆஸ்திரேலிய பிரதமருக்கு அரசு மரியாதை அளிக்கப்படவுள்ளது. அதன் தொடர்ச்சியாக, ஆஸ்திரேலிய பிரதமர், சிங்கப்பூர் அதிபரைச் சந்தித்துப் பேசுகிறார்.

எகானமி, பிரீமியம் எகானமி என அனைத்து பிரிவு பயணிகளுக்கும் இது இலவசம்… ஜூலை முதல் அமல் – SIA

சிங்கப்பூர்- ஆஸ்திரேலியத் தலைவர்களுக்கு இடையிலான 8 ஆவது ஆண்டு கூட்டம், ஜூன் 2- ஆம் தேதி காலை நடைபெறுகிறது. கூட்டத்திற்கு பிறகு, ஆஸ்திரேலிய பிரதமருக்கு, சிங்கப்பூரின் தற்காலிகப் பிரதமர் லாரன்ஸ் வோங் சிறப்பு மதிய விருந்தையும் அளிக்கவுள்ளார். இந்த தகவலை சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வரும் ஜூன் 3- ஆம் தேதி முதல் சிங்கப்பூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் ஆஸ்திரேலிய பிரதமர், அன்று மாலையே தாயகம் திரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.