லாசரஸ் தீவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த சிறு வீடுகள்….மே 1 முதல் பொதுமக்கள் முன்பதிவு செய்துக் கொள்ளலாம்!

Photo: Big Tiny Official Facebook Page

சிங்கப்பூரில் உள்ள லாசரஸ் தீவில் (Lazarus Island) சுற்றுச்சூழலுக்கு உகந்த சிறு வீடுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளில் பெரியவர்கள் மூன்று பேர் (அல்லது) இரண்டு பெரியவர்கள், இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் ஒரு வீட்டில் தங்க இயலும். இந்த வீடு ஒவ்வொன்றும் 150 முதல் 170 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளன. சமையலறை, கழிப்பறை, ஹால் ஆகியவை வீட்டில் இடம் பெற்றுள்ளன.

“வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர்..” – தற்போது ஒருவருக்கு தாக்கு: போலீஸ் தலையீடு

சூரியசக்தியில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் பயன்படுத்தப்படும். அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள சிறு வீட்டில், முழுக்க முழுக்க ஏசி வசதி, இலவச இணைய வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிறு வீடுகளை ‘Big Tiny’ என்ற நிறுவனம் அமைத்துள்ளது. இந்த வீடுகளில் தங்குவதற்கு பொதுமக்கள் வரும் மே 1- ஆம் தேதி முதல் முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.

Photo: Big Tiny Official Facebook Page

தமிழ்நாடு முதலமைச்சரைச் சந்தித்த சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் கழகத்தின் தலைவர் ஆண்டியப்பன்!

தொடக்க சலுகைக் கட்டணமாக, ஓர் இரவு இந்த வீட்டில் தங்குவதற்கு 199 சிங்கப்பூர் வாடகையாக செலுத்தினால் போதும். முதற்கட்டமாக, ஐந்து வீடுகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு வீடுகளில் செல்லப் பிராணிகளுக்கும் அனுமதி உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.