“சிங்கப்பூரின் தந்தை லீ குவானுக்கு மன்னார்க்குடியில் நினைவுச் சின்னம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சிங்கப்பூர் போல சென்னையிலும்.. வேற லெவல் பிளான்
Video Crop Image

 

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, சிங்கப்பூர் வந்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ் அமைப்புகள் சார்பில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், சிங்கப்பூரின் சட்டத்துறை மற்றும் உள்துறை அமைச்சர் கா.சண்முகம், சிங்கப்பூருக்கான இந்திய தூதர் பெரியசாமி குமரன், தமிழக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லாரி, டாக்சி மோதி கடும் விபத்து: ஊழியர் உட்பட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி

நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சிங்கப்பூருக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையேயான தொடர்பு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்டது. கல்வியும், உழைப்பும் தான் தமிழர்களின் உயர்வுக்கு காரணம். கடல் கடந்து சிங்கப்பூர் வந்தது போன்ற உணர்வே இல்லை; தமிழகத்தில் இருப்பதைப் போல உணர்கிறேன். இந்தியாவின் வரலாறு தமிழகத்தில் இருந்து தான் தொடங்கப்பட வேண்டும்.

‘அமைச்சர் எஸ்.ஈஸ்வரனுடன் தமிழக முதலமைச்சர் சந்திப்பு’- இருவரும் ஆலோசித்தது என்ன?

தமிழால் இணைந்துள்ள நம்மை மதமோ, சாதியோ ஒருபோதும் பிளவுப்படுத்திவிட முடியாது. சிங்கப்பூரில் உள்ள தமிழர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு தி.மு.க. அரசு கலங்கரை விளக்கமாக உள்ளது. அடுத்தாண்டு நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் தமிழர்கள் அதிகம் இடம் பெற வேண்டும். தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான வசதிகளை தமிழக அரசு செய்துக் கொடுக்கும். சிங்கப்பூரின் தந்தை லீ குவானுக்கு மன்னார்குடியில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.