சிங்கப்பூரில் புகையிலை பொருட்களுக்கு புதிய விதிமுறை..!

The minimum legal age for the purchase, use, possession, sale and supply of tobacco products will be raised

LEGAL AGE FOR SMOKING RAISED TO 20: இந்த ஆண்டு (2020) ஜனவரி 1 முதல் புகையிலை பொருட்களை வாங்குவது, பயன்படுத்துதல், வைத்திருத்தல், விற்பனை செய்தல் மற்றும் வழங்குவதற்கான குறைந்தபட்ச வயது 19-லிருந்து 20 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், குறைந்தபட்ச சட்ட வயதை படிப்படியாக 21 வயதாக உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் மூன்று ஆண்டு திட்டத்தின் இரண்டாவது நடவடிக்கை இதுவாகும்.

படிக்க : சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் தீபாவளி அன்று பட்டாசு வெடித்தவருக்கு அபராதம்..!

புகையிலை (விளம்பரங்கள் மற்றும் விற்பனை கட்டுப்பாடு) (திருத்தம்) மசோதாவின் ஒரு பகுதியாக இது 2017-ல் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குறைந்தபட்ச வயது வரம்பிற்கு கீழுள்ள எந்தவொரு நபருக்கும், புகையிலை பொருட்களையும் விற்கும் சில்லறை விற்பனையாளர்களின் முதல் குற்றத்திற்கு S$5,000 மற்றும் அடுத்தடுத்த குற்றங்களுக்கு S$10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, முதல் குற்றத்திற்காக அவர்களின் உரிமம் இடைநிறுத்தம் செய்யப்படும், மேலும் அடுத்தடுத்த குற்றத்திற்கு உரிமம் ரத்து செய்யப்படும்.

படிக்க : தமிழனின் ஆசையை நிறைவேற்றிய ஸ்கூட்… விமானத்தில் தமிழ் அறிவிப்புக்கு குவியும் வாழ்த்து..!

புகையிலை பொருட்களைப் பயன்படுத்துதல், வாங்குதல் அல்லது வைத்திருத்தல் போன்றவற்றில் பிடிபடும் வயது வரம்பிற்கு குறைவாக உள்ளவர்களுக்கு S$300 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

மேலும், இந்த குறைந்தபட்ச சட்டரீதியான வயது அடுத்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் 21 ஆக உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.