கார் மோதி விபத்து: இரு மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் மருத்துவமனையில்…கார் ஓட்டுநர் மீது விசாரணை

Lentor Ave accident
Stomp

லென்டர் அவென்யூவில் (Lentor Avenue) நேற்றுமுன்தினம் (ஜனவரி 22) கார் மோதி விபத்து ஏற்பட்டது, இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவருக்கு காயம் ஏற்பட்டது.

அன்று பிற்பகல் 3.19 மணியளவில் சம்பவம் நடந்த இடத்தில் ஸ்டாம்ப் நிரூபர் எடுத்த புகைப்படங்களை ஸ்டாம்ப்வுடன் பகிர்ந்துள்ளார்.

சிங்கப்பூரில் பெண் ஒருவரை தேடிவரும் போலீஸ்!

பிற்பகல் 3.13 மணியளவில் கார் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட விபத்து குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாக போலீசார் கூறினர்.

இதில் 29 மற்றும் 25 வயதுடைய இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அப்போது சுயநினைவுடன் இருந்தனர்.

கவனக்குறைவாக வாகனம் ஓட்டி காயம் ஏற்படுத்தியதற்காக 25 வயதான ஓட்டுநர் தற்போது போலீஸ் விசாரணைகளுக்கு உதவி வருகிறார்.

SG Clean Day: 4 வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளின் குப்பைகளை ஊழியர்களே சுத்தப்படுத்த ஊக்குவிப்பு