சிங்கப்பூரில் 40°C போல பொளக்கும் வெயில்… கடும் இன்னலுக்கு ஆளாகும் ஊழியர்கள்

like-40c-singapore
Syahindah Ishak, Canva

சிங்கப்பூரில் நேற்றைய (மே 27) நிலவரப்படி வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது.

நேற்று (மே 27) பிற்பகல் 2 மணி நிலவரப்படி, சிங்கப்பூரின் சில பகுதிகளில் குறிப்பாக கிழக்கில் வெப்பம் நிலையானது 33.3°C ஐ எட்டியது.

விடுதி வெளிநாட்டு ஊழியர்களுக்கு நற்செய்தி: கிராஞ்சி விடுதிக்கு வரும் வசதி.. அனைத்தும் ஒரே இடத்தில்

ஆனால், பிற்பகலுக்குப் பிறகு தீவு முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை கணிக்கப்பட்டது.

சிங்கப்பூரின் வானிலை ஆய்வகம் இந்த மாத தொடக்கத்தில் கூறியதாவது; மே மாதத்தின் பிற்பகுதியில் தினசரி வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸைத் தாக்கக்கூடும் என்று அறிவுறுத்தியது.

மேலும் மழையும் அதிகமாக பெய்து சிறிது குளிர்ச்சியை ஏற்படுத்தும் எனவும் வானிலை ஆய்வகம் கூறியது.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெளி இடங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

அதிகமாக தண்ணீர் பருகும் படியும், குளிர்ச்சியான உணவுகளை உண்ணும்படியும் மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.