தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்துப் பேசிய ‘லிஷா’ அமைப்பினர்!

Photo: LISHA

தமிழ்நாட்டின் திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மகனுமான உதயநிதி ஸ்டாலினை, சென்னையில் லிட்டில் இந்திய கடைக்காரர்கள் மற்றும் மரபுடைமை நிலையம் எனப்படும் ‘லிஷா’ (Little India Shopkeepers and Heritage Association- ‘LISHA’ ) அமைப்பின் நிர்வாகக் குழுவினர் நேரில் சந்தித்துப் பேசினார்.

சுற்றுலா வரும் பயணிகளுக்கு செலவுக்கு பணத்தை வழங்கும் நாடு!

அப்போது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்தும், மாலை அணிவித்தும் ‘லிஷா’ அமைப்பின் நிர்வாகிகள் மரியாதை அளித்தனர். பின்னர், அமைச்சருடன் ‘லிஷா’ நிர்வாகிகள் கலந்துரையாடினர்.

Photo: LISHA

இந்த சந்திப்பு குறித்து ‘லிஷா’ தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், லிட்டில் இந்தியாவின் மக்கள் தொகை மற்றும் உள்ளூர் தமிழ் சமூகம் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றி தெரிந்துக் கொள்ள ஆர்வமாக இருந்தார். திட்டமிட்ட நேரத்தை விட அதிகமாக நீடித்த ஒரு பயனுள்ள சந்திப்பை நாங்கள் நடத்தினோம்.

சடலமாக கிடந்த ஊழியர் – பிரேதத்தை கைப்பற்றிய போலீஸ்: அடையாளத்தை விசாரிக்கும் அதிகாரிகள்

இந்திய மரபுடைமை நிலையம் (Indian Heritage Centre- ‘IHC’) மற்றும் அதன் சார்ந்து நடைபெறும் நிகழ்வுகள் குறித்து அவருக்கு விளக்கினோம். இதைக் கேட்கவும், எங்களை சந்திக்கவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவலாக இருந்தார்” என்று குறிப்பிட்டுள்ளது.