லிஷா சார்பில் வழங்கப்பட்ட இனிப்பு பொங்கல்…ஆர்வத்துடன் வாங்கிச் சென்ற தமிழர்கள், சிங்கப்பூரர்கள், சுற்றுலாப் பயணிகள்!

லிஷா சார்பில் வழங்கப்பட்ட இனிப்பு பொங்கல்...ஆர்வத்துடன் வாங்கிச் சென்ற தமிழர்கள், சிங்கப்பூரர்கள், சுற்றுலாப் பயணிகள்!
Photo: LISHA

 

பொங்கல் பண்டிகையை சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடினர்.

ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் 9வது வருட வருடாபிஷேகப் பெருவிழா-2024!’

தமிழர்களின் பாரம்பரியத்தைப் பறைச்சாற்றும் வகையிலும், இன்றைய தலைமுறையினர் தெரிந்துக் கொள்ளும் வகையிலும், அறிந்துக் கொள்ளும் வகையிலும் லிஷா மற்றும் இந்திய மரபுடைமை நிலையம் சார்பில் லிட்டில் இந்தியாவில் உள்ள Poli@Clive Street- ல் உள்ள அரங்கம் மற்றும் இந்திய மரபுடைமை நிலையம் ஆகிய இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றனர்.

நாட்டுப்புற பாடல்கள், கரகாட்டம், மயிலாட்டம், பரதநாட்டியம், காவடியாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் மட்டுமின்றி, சிங்கப்பூரர்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் கண்டு ரசித்து வருகின்றனர்.

லிஷா சார்பில் வழங்கப்பட்ட இனிப்பு பொங்கல்...ஆர்வத்துடன் வாங்கிச் சென்ற தமிழர்கள், சிங்கப்பூரர்கள், சுற்றுலாப் பயணிகள்!
Photo: LISHA

இந்த நிலையில், பொங்கல் திருநாளின் சிறப்புகளையும், ஒற்றுமை, மனிதநேயம் ஆகியவற்றை வளர்க்கும் வகையில், சிங்கப்பூரில் உள்ள செராங்கூன் சாலையில் (Serangoon Road) பொதுமக்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது. இனிப்பு பொங்கலை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிங்கப்பூர் வாழ் தமிழர்கள், வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள், சிங்கப்பூரர்கள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் வாங்கிச் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

சிங்கப்பூரில் உள்ள 2 மில்லியன் மக்களுக்கு வருகிறது உதவித் தொகை

இனிப்பு பொங்கல் விநியோகம் ஜனவரி 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெற்ற நிலையில், ஜனவரி 17- ஆம் தேதியும் விநியோகிக்கப்படும் என லிஷா தெரிவித்துள்ளது.