ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் 9வது வருட வருடாபிஷேகப் பெருவிழா-2024!’

ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் 9வது வருட வருடாபிஷேகப் பெருவிழா-2024!'
Photo: Sri Senpaga Vinayagar Temple

 

சிங்கப்பூரில் உள்ள சிலோன் சாலையில் (Ceylon Road) அமைந்துள்ளது ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம் (Sri Senpaga Vinayagar Temple). இந்த ஆலயத்தில் இன்று (ஜன.15) திங்கட்கிழமை முதல் ஜனவரி 17- ஆம் தேதி புதன்கிழமை வரை 9வது வருட வருடாபிஷேகப் பெருவிழா- 2024 நடைபெறும் என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் பொங்கலுக்கான பொருட்கள் விற்பனை களைகட்டியது!

அதன்படி, ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் விநாயகருக்கு இன்று (ஜன.15) காலை 10.00 மணிக்கு கணபதி ஹோமமும், மாலை 05.00 மணி ஸ்கந்த ஹோமமும்ஹோமமும் நடைபெற்றது.

நாளை (ஜன.16) காலை 09.30 மணிக்கு பஞ்சாக்ஷர ஸ்ரீ சூக்தஹோமமும், இரவு 07.00 மணிக்கு பஞ்சமுகார்ச்சனையும், ஜனவரி 17- ஆம் தேதி காலை 07.25 மணிக்கு சங்கல்ப்பமும், 1008 சங்கு பூஜையும், காலை 08.50 மணிக்கு மஹா கணபதி மூலமந்திர ஹோமமும்ஹோமமும், காலை 09.00 மணிக்கு மஹா பூர்ணஹூதியும், காலை 11.00 மணிக்கு மூலவிநாயகர் பரிவாரமூர்த்திகள் அபிஷேகமும், கும்பம் அபிஷேகமும், மதியம் 12.00 மணிக்கு விசேட பூஜையும், அதைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறும்.

‘பொங்கல் பண்டிகை 2024’- பொதுமக்களுக்கான பொங்கல் விநியோகம் குறித்த லிஷாவின் முக்கிய அறிவிப்பு!

அன்றைய தினம் மாலை 06.30 மணிக்கு நித்திய மாலை பூஜையும், இரவு 07.00 மணிக்கு வசந்த மண்டபப் பூஜையும், திருவூஞ்சலைத் தொடர்ந்து விநாயகப் பெருமானுடன் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானும் பார்வதி சமேத ஸ்ரீ சதாசிவப் பெருமானும் திருவீதியுலா எழுந்தருளுதலும், இரவு 09.00 மணிக்கு அர்த்தசாமப் பூஜையைத் தொடர்ந்து பிரசாதமும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.