லிட்டில் இந்தியாவில் சட்டவிரோத வேலை, நியமனம்.. சிக்கிய 47 ஊழியர்கள்

சிங்கப்பூரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக திருட்டில்
(PHOTO : Shutterstock)

லிட்டில் இந்தியா உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோத வேலைவாய்ப்பு மற்றும் சட்டவிரோதமாக பணியமர்த்தல் குற்றங்களில் ஈடுபட்டதாக 47 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மனிதவள அமைச்சகம் (MOM) கூறியுள்ளது.

சமையல்காரர்கள், சமையலறை உதவியாளர் அல்லது உணவக உதவியாளர் போன்ற சட்டவிரோதமாக வேலை செய்ததாக அவர்கள் பிடிபட்டனர்.

முதலாளி வீட்டில் கைவரிசை காட்டிய வெளிநாட்டு பணிப்பெண்… S$50000 ரொக்கம் நகைகள் திருட்டு

மேலும், கிளார்க் கீ மற்றும் லிட்டில் இந்தியாவிலுள்ள உணவு மற்றும் பான (F&B) நிறுவனங்களில் காத்திருப்பு ஊழியர்களாகவும் அவர்கள் வேலை செய்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஜூலை 12 முதல் 19 வரை அந்த இரண்டு பகுதிகளில் உள்ள 35 F&B கடைகளின் MOM ஆய்வு செய்தது, அதில் 20 கடைகள் வேலைவாய்ப்புச் சட்டத்தை மீறியதாகக் அது கண்டறிந்தது.

இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

“வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்பு சட்டத்தின் கீழ், செல்லுபடியாகும் வேலை அனுமதி உடைய வெளிநாட்டு ஊழியர்களை மட்டுமே முதலாளிகள் வேலைக்கு அமர்த்த முடியும்.”

அதிகாரபூர்வமான முதலாளியைத் தவிர வேறு நபர்கள் அல்லது வணிகங்களில் ஊழியர்களை சட்டவிரோதமாக பணியமர்த்துவதும் குற்றமாகும் என்று MOM தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு விதிமுறைகளுக்கு நிறுவனங்கள் இணங்கி நடக்கிறதா என்பதை அமைச்சகம் தொடர்ந்து ஆய்வு செய்யும் என MOMன் வெளிநாட்டு மனிதவள மேலாண்மைப் பிரிவின் ஆய்வு இயக்குநர் திருமதி ஷிரீன் பானு கூறினார்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிங்கப்பூரில் வேலை செய்ய “பெஸ்ட் நிறுவனம்” எது ? – நல்ல சம்பளம், சமமாக நடத்துதல், முன்னேற்றம்