சிங்கப்பூரில் வேலை செய்ய “பெஸ்ட் நிறுவனம்” எது ? – நல்ல சம்பளம், சமமாக நடத்துதல், முன்னேற்றம்

சிங்கப்பூரில் வேலை செய்ய "பெஸ்ட் நிறுவனம்" எது ? - நல்ல சம்பளம், சமமாக நடத்துதல், முன்னேற்றம்
(Photo Credit : Ministry of Manpower/FB)

சிங்கப்பூரில் வேலைசெய்ய பெஸ்ட் நிறுவனம் எது என்ற ஆய்வை Danaher Corporation மற்றும் ExxonMobil ஆகியவை நடத்தின.

அதாவது இந்த ஆய்வு ஊழியர்களின் பார்வையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது, அவர்கள் தேர்வு செய்த முதல் 10 கவர்ச்சிகரமான நிறுவனங்களின் தரவரிசையை கீழே காணலாம்.

சிங்கப்பூர் சாலைகளில் செல்லும் நீங்கள் இந்த தவறை ஒருபோதும் செய்யாதீர்கள்: மீறிய வெளிநாட்டு ஊழியருக்கு S$4,800 அபராதம்

2023 ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் மிக சிறந்த நிறுவனமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) தேர்வு செய்யப்பட்டுள்ளதாக Randstad’s Employer Brand Research தெரிவித்துள்ளது.

SIA நிறுவனம் முதல் இடத்தைப் பிடிப்பது இது முதல் முறை அல்ல, ஆறாவது முறையாக அது முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2020 ஆம் ஆண்டிலும் அது முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் உள்ள முதல் 10 கவர்ச்சிகரமான நிறுவனங்களின் பட்டியல் பின்வருமாறு:

  • சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
  • Danaher கார்ப்பரேஷன்
  • சாங்கி விமான நிலைய குழு
  • Pratt & Whitney
  • Edwards Lifesciences
  • மரினா பே சாண்ட்ஸ்
  • Procter & Gamble
  • Dyson
  • DBS
  • ExxonMobil

இதில் அங்கு வேலை செய்யும் மற்றும் வேலை தேடி கொண்டிருந்த சுமார் 2,753 ஊழியர்கள் ஆய்வில் பதிலளித்தனர்.

ஊழியர்களுக்கு நல்ல சம்பளம், சமநிலை, வேலையின்போது முன்னேற்ற நடவடிக்கை ஆகியவை இதில் மதிப்பிடப்பட்டன.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆதரவாக களத்தில் 40க்கும் மேற்பட்ட அமைப்புகள்.. “ஊழியர்களை லாரியில் ஏற்றக்கூடாது” – பிரதமருக்கு மனு