புதுப்பொலிவுடன் ஜொலிக்கும் மகாத்மா காந்தி நினைவு மண்டபம்!

File Photo

சிங்கப்பூரில் உள்ள முக்கிய இடங்களில் ஒன்றான லிட்டில் இந்தியாவில் அமைந்துள்ளது மகாத்மா காந்தி நினைவு மண்டபம் (Mahatma Gandhi Memorial). இந்த நினைவு மண்டபத்தை 11 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்திருந்தது சிங்கப்பூர் இந்தி மொழிச் சங்கம். அதைத் தொடர்ந்து, குத்தகை முடிவடைந்த நிலையில், கடந்த 2019- ஆம் ஆண்டு விட்டு சென்றது. அதன் தொடர்ச்சியாக, மகாத்மா காந்தி நினைவு மண்டபம் கடந்த 2019- ஆம் ஆண்டு செப்டம்பர் 12- ஆம் தேதியில் இருந்து மூடப்பட்டிருந்தது.

சிங்கப்பூரில் பாலிடெக்னிக் பட்டதாரிகளுக்கு அதிகரிக்கும் வேலை..!

இந்த நிலையில், தற்போது கொரோனா, ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், பல்வேறு கட்டுப்பாடுகள் சிங்கப்பூரில் அமல்படுத்தப்பட்டுள்ளன. இச்சூழலில், சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் நிர்வாகக் குழு, உறுப்பினர்கள் ஆகியோர் மகாத்மா காந்தி நினைவு மண்டபத்தைப் புனரமைக்க முடிவு செய்து, அதற்கான பணியைத் தொடங்கினர். அதன் பயனாக பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், தற்பொழுது பணிகள் நிறைவடைந்தது. இதனால் மகாத்மா காந்தி நினைவு மண்டபம் புதுப்பொலிவுடன் ஜொலிக்கிறது. வண்ணமின் விளக்குகள் காண்போரைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. அத்துடன் நினைவு மண்டபத்தின் செயல்பாடுகளும் மீண்டும் இயங்கி வருகிறது.

ஜனவரி 17- ஆம் தேதி அன்று ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு!

சிங்கப்பூருக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகள், மகாத்மா காந்தி நினைவு மண்டபத்தைப் பார்வையிட்டு செல்கின்றனர். அத்துடன், மற்ற நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளும், காந்தி நினைவு மண்டபத்தைப் பார்வையிட்டு செல்கின்றனர். இதனால், அந்த பகுதியில் உள்ள கடைகளில் வியாபாரம் கணிசமான அளவு உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.