லிட்டில் இந்தியாவில் திரண்ட வெளிநாட்டு ஊழியர்கள்! – புலம்பெயர்ந்தோர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சிகள்!

ittle India shop fined
Photo: Getty

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள், சொந்த நாட்டில் இருப்பதைப் போன்ற உணர்வுடன் இருக்கவும் அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்தவும் அரசுத் தரப்பில் முயற்சி எடுக்கப்படும் என்று மனிதவள துணை அமைச்சர் கோ போ கூன் தெரிவித்தார்.

சர்வதேச புலம்பெயர்ந்தோர் நாளை முன்னிட்டு நேற்று லிட்டில் இந்தியாவின் பர்ச் சாலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர்,வெளிநாட்டு ஊழியர்களுக்கு பாதுகாப்பான,வசதியான வாழ்க்கைச் சூழலை அமைப்பதற்கான முயற்சிகள் தொடரும் என்று கூறினார்.

பலதரப்பட்ட சூழ்நிலைகளைச் சமாளிக்கும் வகையில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று கூறினார்.இவற்றுடன் வெளிநாட்டு ஊழியர்களுக்கான சமூகப் பொழுதுப்போக்கு வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

இவற்றை எல்லாம் சாதிக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார்.மனிதவள அமைச்சகத்தின் ACE குழுமம் நூற்றுக்கும் மேற்பட்ட கூட்டாளி அமைப்புகளுடன் சேர்ந்து பல்வேறு நிகழ்சிகளை நடத்தியது.

‘கைகோர்ப்போம், பிணைப்பை உறுதியாக்குவோம்’ என்ற கருப்பொருளுடன் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.சுமார் ஐம்பதாயிரம் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.