லிட்டில் இந்தியாவில் கொடுமை செய்யப்பட்ட “தமிழ் மொழி”… Google translate செய்தால் இப்படித்தான்!

liquor-rules-amendment jan.2 2024

லிட்டில் இந்தியாவில் MRT நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் மொழி அடங்கிய விளம்பரங்களில் தமிழர்களுக்கே புரியாத வண்ணம் எழுத்துக்கள் அமையப்பெற்றிருந்தது.

இந்நிலையில், இந்த பிழை குறித்து வேலையிட பாதுகாப்பு சுகாதார மன்றம் தனது facebook பக்கத்தில் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.

தலையில் பிளாஸ்டிக் பை அணிந்து காபி கடைக்குள் திருட்டு – CCTV காட்சிகளை வைத்து தூக்கிய போலீஸ்

அதாவது ‘Take Time to Take Care’ இயக்கம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட #WSHWorkout சவால் விளம்பரங்களில் அந்த பிழை இருந்ததாக செய்தி குறிப்பிட்டுள்ளது.

“லிட்டில் இந்தியா MRT நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தேசிய #WSHWorkout Challenge-ன் பிழை அடங்கிய தமிழ் விளம்பரங்களுக்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்று வேலையிட பாதுகாப்பு சுகாதார மன்றம் facebook வாயிலாக மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், நேற்றிரவு ரயில் நிலையம் மூடப்பட்டவுடன் விளம்பரங்கள் சரி செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

பிழைகள் எவ்வாறு எழுந்தன என்பதை ஆராய்ந்து வருவதாகவும், இதுபோன்ற பிழைகள் மீண்டும் ஏற்படாது என்று என்று உறுதியும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், google translate செய்தால் இப்படி தான் பிழை வரும் என்றும், தமிழ் தெரிந்தவர்களிடம் கேட்டு உறுதி செய்துகொள்ளும்படியும் சிலர் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

சிங்கப்பூருக்குள் இரு மலைப்பாம்புகளை கடத்திய ஓட்டுனருக்கு S$5,000 அபராதம்