விமானத்தில் உயிருள்ள சிறுத்தை கெக்கோ பல்லியை கடத்த முயற்சி

விமானத்தில் உயிருள்ள சிறுத்தை கெக்கோ பல்லியை கடத்த முயற்சி live_leopard_gecko_lizard_ica
(Facebook/ICA)

சாங்கி சரக்கு விமான நிலையத்தில் இருந்து கடத்த முயன்ற உயிருள்ள சிறுத்தை கெக்கோ (leopard gecko) பல்லி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) நேற்று (செப் 19) தெரிவித்தது.

பார்சலை ஸ்கேன் செய்தபோது சில முரண்பாடுகளைக் கண்டறிந்ததாகவும், கூடுதல் சோதனைகளை மேற்கொண்டபோது அந்த பல்லியை கண்டுபிடித்ததாகவும் ICA அதிகாரிகள் கூறினர்.

இந்திய ஊழியர் உட்பட இரு வெளிநாட்டு கட்டுமான ஊழியர்கள் விபத்தில் சிக்கி மரணம்

சிறுத்தை போன்ற புள்ளிகளை கொண்ட இந்த சிறுத்தை கெக்கோ பல்லி ஆப்கானிஸ்தான், ஈராக், ஈரான் மற்றும் வடமேற்கு இந்தியாவில் உள்ள வறண்ட பகுதிகளில் காணப்படும்.

மேலும் இதனை பல்வேறு வண்ணங்கள், வடிவங்கள் மற்றும் அளவுகளில் காணலாம்.

கூடுதல் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டி இந்த வழக்கு தேசிய பூங்கா வாரியத்திற்கு (NParks) பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்த சிறுத்தை கெக்கோ பள்ளி NParks வனவிலங்கு மறுவாழ்வு மையத்தின் பராமரிப்பில் உள்ளதாக ICA தெரிவித்துள்ளது.

டோட்டோ லாட்டரியில் இந்தியருக்கு 1 கோடி பரிசா? லிட்டில் இந்தியாவில் வாங்கப்பட்ட டிக்கெட்