பிரிண்டர் உள்ளே சிக்கிக்கொண்ட பல்லி செய்யும் சேட்டை – வைரலாகும் வீடியோ

Lizard gets stuck running viral video

விலங்குகள் செய்யும் நகைச்சுவையை நாம் அடிக்கடி பார்த்து இருப்போம், அதை நாம் ரசித்தும் இருப்போம்.

அதே போல ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. பிரிண்டர் சாதனத்துக்குள் சிக்கிக்கொண்ட பல்லி ஒன்று செய்யும் சேட்டை நம் அனைவரையும் புன்முறுவல் செய்ய வைக்கிறது.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் எகிறும் வாடகை… “இனி முதலாளிகள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்” – MOM

ரசீது எடுக்கும் சிறிய பிரிண்டரில் சிக்கிக்கொண்ட பல்லி செய்யும் அலப்பறை TikTok வீடியோ மூலமாக வலைத்தளங்களில் பரவியது.

மலேசியாவில் உள்ள ஒரு கடையில் எடுக்கப்பட்ட காட்சிகளில், அச்சு காகிதத்தின் மேலே இருந்த பல்லி துள்ளிக் குதித்து ஓடுவதையும், அதிலிருந்து அது தப்பிக்க முயலும் காட்சிகளும் தான் அது.

அதைத் தொடர்ந்து, பிரிண்டர் சாதனம் நிறுத்தப்பட்டதும் தப்பிக்க முயற்சி செய்யும் பல்லி அச்சுப்பொறியின் மூலைக்குள் ஒளிந்துகொள்கிறது.

பிரிண்டர் மீண்டும் இயக்கப்படும்போது ட்ரெல்மில்லில் ஓடுவது போல பல்லி உடற்பயிற்சி செய்வதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Video: https://www.tiktok.com/tag/pejuang30k?refer=embed

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

வேன், லாரி, பைக் மோதி விபத்து: லாரியால் 30மீ தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆடவர் உயிரிழப்பு