கடனை கேட்டு துன்புறுத்தல்… வாசலில் சைக்கிள் சங்கிலியால் பூட்டு போட்டு அட்டூழியம்

loanshark harassment arrest

சிங்கப்பூரில் கடனை கேட்டு துன்புறுத்திய வழக்கில் 56 வயது ஆடவர் ஒருவர் நேற்று (அக் 12) கைது செய்யப்பட்டார்.

உபி அவென்யூ 1ல் கடன்முதலை துன்புறுத்தல் குறித்து கடந்த திங்கள்கிழமை தகவல் கிடைத்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

போலீஸ் அதிகாரி கையோடு சேர்த்து கண்ணாடியை இறக்கிவிட்டு டாக்ஸியை இயக்கிய ஓட்டுநர் கைது

அங்குள்ள வீட்டு வாயில் கதவு சைக்கிள் சங்கிலியால் பூட்டப்பட்டு இருந்ததாகவும், அதனுடன் பெற்ற கடன் திரும்ப வேண்டும் என்பது பற்றிய குறிப்பும் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகள் மற்றும் போலீஸ் கேமரா உதவியுடன், அதிகாரிகள் அந்த நபரின் அடையாளத்தை கண்டறிந்து அவரை கைது செய்தனர்.

தீவு முழுவதும் கடனை கேட்டு துன்புறுத்திய பல வழக்குகளில் அந்த நபர் தொடர்புடையவர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் சைக்கிள் பூட்டு, நோட்புக் மற்றும் கருப்பு மார்க்கர் ஆகியவை வழக்கு காட்சிப் பொருளாக கைப்பற்றப்பட்டன.

தொடர்ந்து கோடிக்கணக்கில் பிடிபடும் கடத்தல் தங்கம் – என்னதான் நடக்குது?