ஃபோர்க்லிஃப்ட் இயந்திரம் தாக்கி காலை இழந்த ஊழியர்… நிறுவனத்துக்கு S$240,000 அபராதம்

ஃபோர்க்லிஃப்ட் இயந்திரம் தாக்கி காலை இழந்த ஊழியர்... நிறுவனத்துக்கு S$240,000 அபராதம்
Unsplash

ஃபோர்க்லிஃப்ட் இயந்திரம் தாக்கி ஊழியர் ஒருவர் பாதிக்கப்பட்ட நிலையில், அந்நிறுவனத்துக்கு S$240,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஊழியரின் கால் துண்டித்து எடுக்கப்பட்டதாக மனிதவள அமைச்சகம் (MOM) இன்றைய (அக் 6) செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

உதவிக்கு யாரும் இல்லாமல் ஆபத்தில் இருந்த மூதாட்டிக்கு ஓடி உதவிய வெளிநாட்டு ஊழியர் – பாராட்டு

வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டத்தின் கீழ் Hoy San Stevedoring லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துக்கு அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 21, 2020 அன்று, சக ஊழியர் போர்க்லிஃப்டைப் பயன்படுத்தி பெட்டிகளை ஏற்றி இறக்கி கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த பக்கம் பாதிக்கப்பட்ட ஊழியர் நடந்துச் சென்றுள்ளார்.

அப்போது கப்பலில் சரக்குகளை ஏற்றிக்கொண்டிருந்த ஃபோர்க்லிஃப்ட் இயந்திரம் திடீரென அவர் மீது மோதியதாக கூறப்பட்டுள்ளது.

இதில் காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவரது காலில் எலும்பு முறிவு இருப்பது கண்டறியப்பட்டது.

அவரது வலது காலின் மூட்டு கீழ் பகுதியை துண்டிக்க முழங்காலுக்கு கீழே அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து MOM மேற்கொண்ட விசாரணையில், ஊழியர்களுக்கு ஏற்படும் அபாயங்களை அந்நிறுவனம் சரியாக கண்டறியவில்லை என கண்டுபிடிக்கப்பட்டது.

அடையாளம் காணப்பட்ட அபாயங்களைக் தடுக்க தேவையான நடவடிக்கைகளை நிறுவனம் எடுக்கவில்லை என்றும் MOM கண்டறிந்தது.

கண்டெடுக்கப்பட்ட பணப்பையை உரியவரிடம் ஒப்படைக்க வழிவகை செய்த வெளிநாட்டு ஓட்டுநர் சுரேஷ் – குவியும் பாராட்டு