கண்டெடுக்கப்பட்ட பணப்பையை உரியவரிடம் ஒப்படைக்க வழிவகை செய்த வெளிநாட்டு ஓட்டுநர் சுரேஷ் – குவியும் பாராட்டு

SMRT bus captain return wallet
Photos courtesy of Iffah

உட்லண்ட்ஸ் பேருந்து நிறுத்தத்தில் கண்டெடுக்கப்பட்ட பணப்பையை உரியவரிடம் கிடைக்க வழிவகை செய்த SMRT பேருந்து ஓட்டுநர் அனைவரின் பாராட்டையும் பெற்றுவருகிறார்.

அந்த பணப்பை உள்ளே NRIC கார்டும் இருந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இரண்டு பெண்களை தேடிவரும் போலீசார்

பணப்பை அதன் உரிமையாளரிடம் முறையாக போய் சேரவேண்டும் என்பதற்காக கூடுதல் மைல் தூரம் சென்று அவர் உதவியுள்ளார்.

மலேசியப் பேருந்து ஓட்டுநரான சுரேஷ் குமார் என்ற அவர், 11 ஆண்டுகளாக சிங்கப்பூரில் பேருந்துகளை இயக்கி வருகிறார்.

வேலை நேரம் முடிந்த பிறகு, NRIC இல் குறிப்பிடப்பட்ட உரிமையாளரின் முகவரிக்கு சென்று அங்கு ஒரு குறிப்பை எழுதி வைத்துவிட்டு வந்துள்ளார்.

இதனை அடுத்து அதனை கண்ட உரிமையாளர் அவர் கொடுத்த வாட்ஸ்ஆப் எண்ணை தொடர்புகொண்டு பணப்பையை பெற்றுக்கொண்டார்.

நல்லுள்ளம் கொண்ட சுரேஷ், உரிமையாளர் கொடுத்த வெகுமதியையும் ஏற்க மறுத்துவிட்டார்.

மதர்ஷிப்பிடம் பேசிய பணப்பை உரிமையாளர் இஃபா, செப். 11ஆம் தேதி புத்தகங்கள் வாங்க அரபு ஸ்ட்ரீட்டுக்கு செல்லும் போது தனது பணப்பையை தொலைத்துவிட்டதாக விளக்கினார்.

பிளாக் 402 உட்லண்ட்ஸ் அவென்யூ 3 இலிருந்து 966 என்ற பேருந்தில் யூனோஸ் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது பணப்பை தொலைந்துள்ளது.

பணப்பையில் NRIC, கிரெடிட் கார்டுகள், வேலையிட சாவி, வீட்டு சாவி மற்றும் S$10 பணமும் இருந்தது.

பணப்பை காணாமல் போன இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பிறகு அவர்களின் வீட்டு வாசலில் கையால் எழுதப்பட்ட குறிப்பைக் கண்டுபிடித்த குடும்பத்தினர் நிம்மதியடைந்தனர்.

அவரின் நற்குணத்தையும், உதவும் உள்ளத்தையும் கண்ட உரிமையாளரின் குடும்பத்தினர் மனதார பாராட்டினர்.

இரு ராஜநாகம் இணையும் அரிய காட்சி.. சிங்கப்பூர் புகைப்படக் கலைஞரின் செம்ம கிளிக்