லாரி, கார்கள் மோதி விபத்து; மூன்று பேரை கைது செய்தது சிங்கப்பூர் காவல்துறை!

Photo: SHIN MIN DAILY NEWS

ஏப்ரல் 09- ஆம் தேதி அன்று காலை 07.15 மணிக்கு சிங்கப்பூரின் சிலேத்தார் விரைவுச் சாலையை நோக்கி செல்லும் மத்திய விரைவுச் சாலையில் மூன்று கார்களும், ஒரு லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இது குறித்து சிங்கப்பூர் காவல்துறையினருக்கும் (Singapore Police Force), சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கும் (Singapore Civil Defence Force) தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

படிக்கட்டுகளில் இருந்து தள்ளிவிடப்பட்ட இந்திய வம்சாவளி மரணம்!

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தைச் சீர்செய்தனர். அத்துடன், காயங்களுடன் மீட்கப்பட்ட 33 வயதான லாரி ஓட்டுநர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சையை அளித்திருந்தனர். இந்த நிலையில், அவர் தற்போது சுயநினைவுடன் நலமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த சிங்கப்பூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில், மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக 27 மற்றும் 47 வயதுள்ள இரண்டு ஆண்கள் மற்றும் 29 வயது பெண்ஆகிய மூவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

இந்திய விசாவுடன் சிங்கப்பூருக்கு வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது!

வாகன விபத்து காரணமாக, மத்திய விரைவுச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.