இந்திய விசாவுடன் சிங்கப்பூருக்கு வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது!

Photo: Changi Airport

கடந்த வெள்ளிக்கிழமை அன்று கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் (Kempegowda International Airport) இருந்து வங்கதேசத்தைச் சேர்ந்த லியாகத் அலி (Liyakath Ali) மற்றும் ரிசாவுல் ஷேக் (Rizaul Sheikh) ஆகிய இருவரும் விமானம் மூலம் செல்லுப்படியாகும் இந்திய விசாவுடன் சிங்கப்பூருக்கு வந்தடைந்தனர்.

படிக்கட்டுகளில் இருந்து தள்ளிவிடப்பட்ட இந்திய வம்சாவளி மரணம்!

அப்போது, சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் (Changi International Airport) இருவரையும் பிடித்த சிங்கப்பூர் குடிநுழைவுத்துறை அதிகாரிகள், அதிரடியாக கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகு, பெங்களூரு விமான நிலையத்திற்கும், இந்திய அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்த சிங்கப்பூர் அதிகாரிகள், அவர்களை அதே விமானத்தில் திருப்பி அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, பெங்களூரு விமான நிலையத்தில் தயாராக இருந்த இந்திய அதிகாரிகள், அந்த வங்கதேச நபர்களை அதிரடியாக கைது செய்தனர். அவர்களை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர், அவர்களிடம் காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர். அத்துடன், பல மெட்ரோ நகரங்களில் தங்கி, ஏஜெண்ட் மூலம் சட்ட விரோதமான முறையில் இந்திய பாஸ்போர்ட்டை பெற்றுக் கொண்டது தெரிய வந்தது.

நடுவானில் விமானத்தில் மதுபோதையில் இருந்த பயணி செய்த காரியம்… அலறிய சக பயணிகள்!

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு ஏஜெண்ட் உதவியுடன் போலிச் சான்றிதழ்கள் மூலம் செல்லுப்படியாகும் வகையில் அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். அவர்கள் மீது வெளிநாட்டினர் சட்டம் மற்றும் பாஸ்போர்ட் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மேலும் விசாரணைக்காக அவர்களை காவலில் எடுத்துள்ளனர்.