வெளிநாட்டு ஊழியர் லாரி, டாக்ஸி, கார் என 6 வாகனங்கள் மோதி விபத்து: தீப்பற்றி எரிந்த கார் – ஐந்து பேர் மருத்துவமனையில்..

லாரி, டாக்ஸி, கார் என 6 வாகனங்கள் மோதி விபத்து: தீப்பற்றி எரிந்த கார் - ஐந்து பேர் மருத்துவமனையில்..

சிங்கப்பூர்: பான்-தீவு அதிவிரைவுச்சாலையில் (PIE) 6 வாகனங்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.

விபத்து நடந்த இடத்தில் காவல்துறை மற்றும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படைகள் (SCDF) உடனடியாக உதவிக்கு விரைந்தன.

வெளிநாட்டு ஊழியர்களிடையே அடிதடி: “பொழைக்க வந்த இடத்துல இதல்லாம் தேவையா?” – சக ஊழியர்கள் காட்டம்

ஜனவரி 21 அன்று அதிகாலை 5.10 மணியளவில் துவாஸ் நோக்கி செல்லும் PIE சாலையில் தீ மற்றும் விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக SCDF தெரிவித்துள்ளது.

பின்னர் அங்கு விரைந்து வந்த SCDF படை தண்ணீர் பீச்சியடிக்கும் ஜெட் கருவி மூலம் தீயை அணைத்தது.

விபத்தில் சிக்கிய 19 முதல் 69 வயதுக்குட்பட்ட ஐந்து பேர், டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்கள் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

விசாரணைகள் நடந்து வருகின்றன.

வெளிநாட்டு ஊழியர்களை தூங்க விடாமல் தொல்லைதரும் மூட்டை பூச்சி: மன அழுத்தம், ஆன்சிட்டி ஏற்படும் அபாயம் – என்னதான் செய்றது?