பேருந்து, லாரி உட்பட 4 வாகனங்கள் மோதி கடும் விபத்து: ஒருவர் மரணம் – லாரி ஓட்டுநர் கைது

Lorry Crashes Upp Thomson Road man dies
Photo: Online

பேருந்து, லாரி மற்றும் வேன் ஆகியவற்றுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் இறந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 7) காலை 10.05 மணியளவில் லோர்னி சாலையை நோக்கி செல்லும் அப்பர் தாம்சன் சாலையில் விபத்து ஏற்பட்டதாக அவசர சேவைகளுக்கு தகவல் வந்தன.

ஸ்ரீ மன்மத காருணீஸ்வரர் கோவிலில் அன்னதானம் வாங்க சென்றபோது தகராறு.. ஆடவருக்கு சிறை

இதில் 70 வயது ஓட்டுநர் இருக்கையில் சிக்கி இருந்ததை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் (SCDF) கண்டுபிடித்தனர்.

ஹைட்ராலிக் மீட்பு கருவி உதவியுடன் காரின் மேற்கூரையை வெட்டி எடுத்து அவர் மீட்கப்பட்டார்.

பின்னர் அவர் துணை மருத்துவர்களால் சோதனை செய்யப்பட்டு சுயநினைவுடன் டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையிலேயே அவர் இறந்ததாக SCDF மற்றும் போலீசார் தெரிவித்தனர்.

மற்ற இரண்டு பேர் சிறிய காயங்களுடன் தப்பித்தனர்.

இந்நிலையில், கவனக்குறைவாக வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்தியதற்காக 26 வயதுமிக்க லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகள் நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

“வெளிநாட்டு ஊழியர்களை லாரியில் ஏற்றிச் செல்லக் கூடாது” – மீண்டும் சூடு பிடிக்கும் விவாதம்