லாரி, கனரக வாகனம், உலோகக் குழாய் இடையே சிக்கிக்கொண்ட ஊழியர் – மருத்துமனையில் அனுமதி!

SCDF Emergency Medical Services crew attending to the trapped man.
SCDF/Facebook

லாரி, கனரக டிரெய்லர் வாகனம் மற்றும் உலோகக் குழாய் ஆகியவற்றிற்கு இடையில் கடுமையாக சிக்கிய ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த அவர், பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) நேற்று (மே 27) தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.

பாலியல் உறவை வலுப்படுத்த உட்கொண்ட ஒரு பொருளால் ஏற்பட்ட விபரீதம்… பிறப்புறுப்பு, வாய், கைகளில் பாதிப்பு – உஷார்

இந்த சம்பவம் நேற்று (மே 27) வெள்ளிக்கிழமை மதியம் 1.05 மணியளவில் டெஃபு அவென்யூ 2 நடந்தது என்று SCDF கூறியுள்ளது.

இதில் உதவிக்காக, பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழுவில் (DART) இருந்து வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

இரண்டு ஏர் லிஃப்டிங் பைககள் இந்த மீட்பு பணியின் போது பயன்படுத்தப்பட்டன. அதனை அடுத்து DART வீரர்களால் பத்திரமாக மீட்கப்பட்ட அந்த ஊழியர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சமீபத்திய மாதங்களில் DART மீட்புக் குழு அதிகம் பயன்படுத்தப்படுகிறது, இது முதல் முறை அல்ல.

தொழிற்ச்சாலை கட்டிடத்தில் இரசாயன கசிவு… “அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம்” – எச்சரிக்கை செய்யும் SCDF