சிங்கப்பூரில் அதிக தொடக்க சம்பளத்தை விரும்பும் ஊழியர்கள்!

foreign worker jailed illegal money transfer
Photo: salary.sg Website

சிங்கப்பூர்: “குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களை மேம்படுத்துவது என்பது குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயிப்பது போல் எளிதானது அல்ல” என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

இதனால் ஏற்படும் எதிர்பார்க்கப்படாத விளைவுகள் குறித்தும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பெரிய அளவில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட போகிறார்களா..? – விளக்கும் நிறுவனம்

குறைந்த ஊதிய ஊழியர்களுக்கான நடவடிக்கை குறித்த கூட்டமைப்பு அரங்கில் பேசிய திரு வோங், குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது அரசாங்கத்திற்கு ஒரு முக்கிய முன்னுரிமையாகும், என்றார்.

அதனால்தான் குறைந்த ஊதிய ஊழியர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அதிக நடவடிக்கைகளை சேர்ப்பதாக அவர் கூறினார்.

ஆனால் சிங்கப்பூரில் குறைந்த ஊதியம் பெரும் தொழிலாளர்கள் அதிக தொடக்க சம்பளத்தைப் பெற வேண்டும் என்று விரும்புவதாக அவர் சொன்னார்.

அப்படி விரும்பினாலும், இந்தத் தொழிலாளர்கள் தங்கள் பணி முழுவதும் தொடர்ந்து தொழில் முன்னேற்றத்தைக் காண்பதும் முக்கியம் என்பதையும் அவர் விளக்கினார்.

“இது சிறந்த தொடக்க சம்பளத்தை மட்டும் குறிக்காது என்றும், திறமை என்னும் ஏணியுடன் புதிய ஊதிய உயர்வு இணைக்கப்பட்டுள்ளது என்பதையும் திரு வோங் கூறினார்.

உலகின் சிறந்த விமானச் சேவை: இரண்டாம் இடம் பிடித்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சாதனை