சிங்கப்பூர் லக்கி பிளாசா கார் விபத்து: பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதித் திரட்டப்படுகிறது..!

Lucky Plaza car accident

சிங்கப்பூர்: லக்கி பிளாசா ஷாப்பிங் சென்டரில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் (டிச .29) கார் ஒன்று தடுப்பை மீறி பாய்ந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர், மேலும் நான்கு பாதசாரிகள் காயமடைந்தனர்.

டான் டோக் செங் மருத்துவமனைக்கு, ​​41 மற்றும் 50 வயதுடைய இரண்டு பாதசாரிகள் மயக்க நிலையில் கொண்டு செல்லப்பட்டனர், ஆனால் இந்த விபத்தில் ஏற்பட்ட கடுமையான காயங்களின் காரணமாக அவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.

படிக்க: லக்கி பிளாசா ஷாப்பிங் சென்டரில் கார் தடுப்பை மீறி பாய்ந்து விபத்து; இருவர் பலி..!

இந்நிலையில், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்களுக்கு ஆதரவு வழங்கும் சில அமைப்புகள் நிதி திரட்டத் ஆரம்பித்துள்ளன.

இதில் 900க்கும் அதிகமானோர் நன்கொடை வழங்கியுள்ளனர். Centre for Domestic Employees அமைப்பு 100,000 வெள்ளிக்கும் அதிகமான தொகையைத் திரட்டியுள்ளது.

படிக்க : சிங்கப்பூரில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த இருவர் கார் விபத்தில் பலி..!

மேலும், giving.sg என்னும் இணையதளம் திங்கட்கிழமை தொடங்கப்பட்டு நிதித் திரட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த தொகை விபத்தில் காயமடைந்த ஊழியர்களுக்கும், உயிரிழந்த உறவினர்களுக்கும் வழங்கப்படும் என்று அமைப்பு கூறியுள்ளது.

விபத்தில் சிக்கிய அனைவரும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.