‘சந்திர கிரஹணம்’- இந்து அறக்கட்டளை வாரியம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

'சந்திர கிரஹணம்'- இந்து அறக்கட்டளை வாரியம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
Photo: Wikipedia

 

வரும் அக்டோபர் 29- ஆம் தேதி அன்று சந்திர கிரஹணம் (Lunar Eclipse) நிகழ உள்ள நிலையில், இந்து அறக்கட்டளை வாரியம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

“ஊழியர்களுக்கு முறையான காலணிகள் இல்லை, விழுந்து காயம் ஏற்படும் அபாயம் அதிகம்” – சிக்கிய 435 நிறுவனங்கள்

இந்து அறக்கட்டளை வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் அக்டோபர் மாதம் 29- ஆம் தேதி சந்திர கிரஹணம் நிகழ உள்ளது. இந்த கிரஹணம் சிங்கப்பூரில் தெரியும் என்று சிங்கப்பூர் அறிவியல் நிலையம் (Singapore Science Centre) அறிவித்துள்ளது.

முதல் நாள் காதலனை சந்தித்து நிச்சயம் குறித்து பேசிய இளம்பெண்.. அடுத்த நாள் விபத்தில் சிக்கி மரணம்

அதன்படி, அக்டோபர் 29- ஆம் தேதி அன்று அதிகாலை 02.01 மணிக்கு தொடங்கும் சந்திர கிரஹணம், காலை 06.26 மணிக்கு முடிவடைகிறது. இந்து அறக்கட்டளை வாரியத்தால் நிர்வகிக்கப்படும் ஸ்ரீ சிவன் கோயில், ஸ்ரீ மாரியம்மன் கோயில், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில் ஆகிய நான்கு கோயில்கள் புணியாகவாசனம் (Punyahavachanam) செய்த பிறகு, அதாவது கோயில்களை சுத்தம் செய்த பிறகு காலை 07.30 மணிக்கு கோயில் நடைத் திறக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.