சீன புத்தாண்டை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் கொண்டாடிய ‘MWC’!

"சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் பங்கு இன்றியமையாது" - தடபுடலாக நடக்கும் ஊழியர்களுக்கு சிறப்பு விருந்து
Photo: Migrant Workers' Centre Of Facebook Page

கடந்த ஜனவரி 22, 23 ஆகிய நாட்களில் சிங்கப்பூரில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர் மையம் (Migrant Workers’ Centre- ‘MWC’), புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் இணைந்து சீனப் புத்தாண்டைக் கொண்டாடியது. இந்த நிகழ்ச்சியில், சுமார் 8,500 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் (Migrant Workers) கலந்துக் கொண்ட நிலையில், அவர்களுக்கு ஆரஞ்சு பழங்கள் மற்றும் புத்தாண்டு தின வவுச்சர்கள் (Vouchers) வழங்கப்பட்டது.

செம்பவாங் பகுதியில் உள்ள கடையில் தீ விபத்து! – மருத்துவமனைக்குச் செல்ல மறுத்த நபர்…

அதனை இன்ப முகத்துடன் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெற்றுக் கொண்டனர். இந்த இரண்டு நாட்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருந்தன. குறிப்பாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான போட்டிகளும் நடத்தப்பட்டது.

Photo: Migrant Workers’ Centre Official Facebook Page

அத்துடன், உள்ளூர் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பாடகர்களின் இசை நிகழ்ச்சியும், சிங்க நடனங்களும் இடம் பெற்றிருந்தது. இந்த நிகழ்ச்சிகளைக் கண்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆரவாரம் செய்தும், குரல் எழுப்பியும் மகிழ்ந்தனர். அப்போது ஒவ்வொருவரின் முகத்திலும் மகிழ்ச்சியும், புன்னகையும் காணப்பட்டது.

நேபாள விமான விபத்து- கருப்புப் பெட்டி சிங்கப்பூருக்கு வருகிறது!

புலம்பெயர்ந்த தொழிலாளர் மையத்தின் தலைவர் (MWC Chairman Mr Yeo Guat Kwang) தலைமையில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்களில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மோசடிகள், பணியிட பாதுகாப்பு, மனநலம் போன்ற முக்கியமான பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.