வேலை செய்த இடத்தில் கைவரிசை காட்டிய ஊழியர் – S$173,000 மதிப்புள்ள வாட்ச் திருட்டு… ஊழியர் சிறையில் அடைப்பு

6-bangladeshi-nationals-arrested-for-gang-robbery-
(Photo: TODAY)

சிங்கப்பூரில் இரண்டு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 24 வயதுமிக்க ஊழியரை சிங்கப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

வல்லிச் ஸ்ட்ரீட்டில் அமைந்துள்ள உடற்பயிற்சி கூடத்தில், கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி மாலை 6:30 மணியளவில், விலையுயர்ந்த கைக்கடிகாரம் திருடப்பட்டது குறித்து போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்: அதிக அளவில் ஊழியர்களை வேலைக்கு எடுக்க பேருந்து நிறுவனங்களுக்கு அனுமதி

இதைத்தொடர்ந்து, உடற்பயிற்சி கூடத்தின் ஊழியரான ஹோவர்ட் லாம் வென் ஜுன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், அவர் இரண்டு தனித்தனி சம்பவங்களில் சுமார் S$173,000 மதிப்புள்ள இரண்டு கடிகாரங்களை திருடியதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர் கைதான பிறகு அந்த இரண்டு கைக்கடிகாரங்களும் கைப்பற்றப்பட்டன.

கடந்த ஜூன் 13 அன்று, குற்றம் சாட்டப்பட்ட ஊழியருக்கு தற்போது சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிங்கப்பூரைக் கட்டியெழுப்பியதற்கு உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகை, தள்ளுபடி, குறைந்த விலையில் சேவை – அதிரடி அறிவிப்பு