‘மதுரை, சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை’- பயணக் கட்டணம் எவ்வளவு தெரியுமா?

Photo: Air India Express Official Twitter Page

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express), தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் தொடர்ந்து நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது.

திருமணம் முடிக்க மிகுதியானோர் காட்டும் ஆர்வம்! – மண்டபங்களுக்கான கட்டணம் உயரும் என்று அறிவிப்பு!

அதில், மதுரை, சிங்கப்பூர் வழித்தடத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வழங்கி வரும் விமான சேவையைக் குறித்து விரிவாகப் பார்ப்போம். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை, வியாழன்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய மூன்று நாட்களிலும் மட்டும் இந்த வழித்தடத்தில் விமான நிறுவனம் விமான சேவையை வழங்கி வருகிறது.

தற்போது புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்டப் பண்டிகைகள் நெருங்கி வரும் நிலையில், மதுரை, சிங்கப்பூர் இடையேயான விமான சேவைக்கான கட்டணத்தைப் பல மடங்கு அதிகரித்துள்ளது விமான நிறுவனம். அதன்படி, அதிகபட்சக் கட்டணமாக 41,476.31 ரூபாயாகவும், குறைந்தபட்சக் கட்டணமாக 14,887.16 ரூபாயாகவும் நிர்ணயித்துள்ளது.

அதிவிரைவாக பறந்த 3 மோட்டோர் சைக்கிள்கள் – அதிகாரிகளின் வியக்கும் ரேஸ்: வீடியோ வைரல்

விமான பயணக் கட்டணம் திடீரென்று உயரந்துள்ளதால், பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், அவர்கள் தங்களின் சிங்கப்பூர் பயணத்தையும் ஒத்திவைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Photo: Air India Express Website

புத்தாண்டு, பள்ளிகளுக்கு விடுமுறையால், இந்தியாவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், விமான நிறுவனங்கள் பயணக் கட்டணங்களை உயர்த்தியுள்ளனர்.