மதுரை, சிங்கப்பூர் இடையேயான இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை குறித்த விரிவான தகவல்!

Photo: IndiGO Official Twitter Page

மதுரை, சிங்கப்பூர் இடையேயான இண்டிகோ ஏர்லைன்ஸ் (Indigo Airlines) விமான சேவை குறித்து விரிவாகப் பார்ப்போம். அதன்படி, மதுரை மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தினசரி விமான சேவையை இந்த விமான நிறுவனம் வழங்கி வருகிறது. எனினும், இவை நேரடி விமான சேவைக் கிடையாது. இந்த வழித்தடத்தில் மட்டும் தினசரி ஏழு விமான சேவைகளை விமான நிறுவனம் வழங்கி வருகிறது.

சிங்கப்பூரில் வெளிநாட்டு பணியாளர்கள் எதிர்கொள்ளப்போகும் சிக்கல்? திடீரென நடந்த மாற்றம்!

இதில் மதுரையில் இருந்து பெங்களூரு வழியாக சிங்கப்பூருக்கு இரண்டு விமான சேவைகளையும், மதுரையில் இருந்து சென்னை வழியாக சிங்கப்பூருக்கு ஐந்து விமான சேவைகளையும் இண்டிகோ ஏர்லைன்ஸ் வழங்கி வருகிறது. இதேபோல், சிங்கப்பூரில் இருந்து பெங்களூரு வழியாக மதுரைக்கு இரண்டு விமான சேவைகளையும், சிங்கப்பூரில் இருந்து சென்னை வழியாக மதுரைக்கு ஐந்து விமான சேவைகளையும் வழங்கி வருகிறது.

சிங்கப்பூரை விட்டு வெளியேறிய வெளிநாட்டுத் தொழிலாளர்கள் எங்கே ? – சம்பளத்தை உயர்த்தினால் உள்ளூர் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுவார்களா!

இந்த விமான சேவைக்கான பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் விமான பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.goindigo.in/ என்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.