சிங்கப்பூரில் வெளிநாட்டு பணியாளர்கள் எதிர்கொள்ளப்போகும் சிக்கல்? திடீரென நடந்த மாற்றம்!

retrenchments-2024-increase-ntuc-measures

சிங்கப்பூரில் தனி­யார் வீடு­க­ளின் விலை இந்த ஆண்­டின் இரண்­டாம் காலாண்­டில் 3.5 விழுக்­காடு கூடி­யது. இதன் காரணமாக வீடுகளின் வாடகை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இரண்­டாம் காலாண்­டில் தனி­யார் வீட்டு விலை 3.2 விழுக்­காடு உய­ரும் என்ற நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யம் கூறி இருந்தது. ஆனால் விலை எதிர்பார்த்த அளவை விட உயர்ந்துவிட்டது.

மேலும் முதல் காலாண்­டில் தனி­யார் வீடு­க­ளின் விலை 0.7 விழுக்­காடு மட்­டுமே உயர்ந்­த நிலையில், தற்போதைய உயர்வு மிக அதிகமாகும்.

நக­ரத்­தின் சுற்­று­வட்­டத்­தி­லும் தனி­யார் வீடு­க­ளின் விலை உயர்ந்துள்ளது.

குறிப்­பாக முதல் காலாண்­டில் குறைந்­தி­ருந்த தரை வீடு தவிர்த்த மற்ற தனி­யார் வீடுகளின் விலை 3.6 விழுக்­காடு அதி­க­ரித்­தது.

தரை வீடு­க­ளின் விலை இரண்­டாம் காலாண்­டில் 2.9 விழுக்­காடு உயர்ந்­தது. தேவைக்­­கேற்ப கட்­டப்­படும் வீடு­க­ளின் கட்­டு­மா­னத்­தில் நில­வும் தாம­தம், பெரிய வீடு­களை வாங்க விருப்­பம் போன்ற கார­ணங்­க­ளால் மறு­விற்­பனை வீடு­கள் ஏற்­றம் கண்டுள்ளது.

விற்­கப்­பட்ட வீடு­க­ளின் எண்­ணிக்கை தொடர்ந்து மூன்­றா­வது காலாண்­டாக குறைந்­துள்­ளது.