வேலையை விடப்போவதாக கூறிய வெளிநாட்டு பணிப்பெண்ணை அடித்து துன்புறுத்தியவருக்கு சிறை

Woman jailed for kicking maid
Unsplash

வேலையில் இருந்து விலக எண்ணுவதாக பணிப்பெண் கூறியதை அடுத்து கோபமடைந்து அவரை தாக்கியவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

34 வயதான பாய் யிஹோங் என்ற பெண்ணுக்கு, எட்டு மாதங்கள் மற்றும் ஆறு வாரங்கள் சிறை தண்டனை நேற்று புதன்கிழமை (மே 25) விதிக்கப்பட்டது.

தானாக முன்வந்து காயப்படுத்தியதற்காக இரண்டு குற்றச்சாட்டுகள் மற்றும் கேமரா ஆதாரங்களை அழிக்க முயன்ற குற்றச்சாட்டையும் அவர் ஒப்புக்கொண்டார்.

இலங்கை நாட்டவர் உட்பட இரு வெளிநாட்டவர் மீது தாக்குதல் நடத்திய இருவருக்கு சிறை

தன்னுடைய குழந்தைக்கு பணிப்பெண்ணிடம் இருந்து நோய் பரவாமல் தடுக்க, பணிப்பெண்ணை வேறு வீட்டில் தங்க வைத்துள்ளார் முதலாளி.

இதனை தொடர்ந்து, பணிப்பெண்ணை மீண்டும் தனது வீட்டிற்கு அழைக்க, முதலாளியின் மனைவியான பாய்-ஆல் தாம் பலமுறை துன்புறுத்தப்பட்டதை எண்ணத்தில் கொண்டு, வீட்டிற்கு திரும்பி வர மறுத்துவிட்டார் பணிப்பெண்.

இந்நிலையில், பணிப்பெண்ணை வீட்டை விட்டு வெளியே அழைத்து வர கை கலப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில், பாயின் தாயார் ஹாய் யுலன், பணிப்பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து, வீட்டை விட்டு வெளியே இழுப்பதற்காக அவரது தோள்களைப் பற்றிக் கொண்டு சண்டையிட்டார் என்று கூறப்படுகிறது.

மியான்மரை சேர்ந்த 31 வயது பணிப்பெண்ணுக்கு இந்த சம்பவத்தால் காயம் ஏற்பட்டது.

கடந்த ஆண்டு 2021 டிசம்பர் மாதம் சீனாவைச் சேர்ந்த பாயின் தாயார் 57 வயதான ஹாய்க்கு S$3,000 அபராதம் விதிக்கப்பட்டது.

தற்போது, பாய்க்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வேலையை விட்டு நிற்பதாக கூறிய வெளிநாட்டு பணிப்பெண்ணை தாக்கியவருக்கு அபராதம்

“இது உனக்கு பிடிக்குமா..?” சிறுமியிடம் தன் உறுப்பை காட்டிய வெளிநாட்டு இளைஞருக்கு சிறை