சம்பளத்தை குறைத்து கொடுத்து, வெளிநாட்டு பணிப்பெண்ணை அடித்து தாக்கிய பெண்ணுக்கு சிறை மற்றும் அபராதம்

இந்தியப் பெண்ணை தீர்த்துக்கட்டிய வெளிநாட்டு பணிப்பெண் - கடும் கோபத்தில் செய்த கொடூர செயல்
(Photo: TODAY)

வீட்டுப் பணிப்பெண் மீது அதிருப்தி அடைந்த பெண் ஒருவர் அவரை சரமாரியாக அறைந்து தாக்கிய குற்றத்திற்காக அவருக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது.

ஜாவோ லின் என்ற 35 வயதான அந்த பெண்ணுக்கு நேற்று திங்களன்று (மே 30) ஐந்து மாத சிறைத்தண்டனை மற்றும் S$1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

தொடரும் மரணங்கள்… மேலும் ஒரு வெளிநாட்டு ஊழியர் 20மீ உயரத்தில் இருந்து கீழே விழுந்து பலி

பணிப்பெண் தனது குடும்பத்தினரைத் தொடர்புகொள்ள வாங்கிய கைபேசியை சேதப்படுத்தியது, தானாக முன்வந்து காயம் ஏற்படுத்தியதற்காக நான்கு குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை ஜாவோ ஒப்புக்கொண்டார். மேலும் நான்கு குற்றச்சாட்டுகள் பரிசீலிக்கப்பட்டன.

மியான்மர் நாட்டைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பணிப்பெண், 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து ஜாவோ வீட்டில் பணிபுரியத் தொடங்கினார்.

ஜாவோ 2017 ஆம் ஆண்டில் இருந்து பணிப்பெண்ணை தாக்கி துன்புறுத்த தொடங்கினார், ஏனெனில் அவரது வேலை அல்லது அணுகுமுறை ஜாவோக்கு திருப்திகரமாக இல்லை என்பதற்காக.

பணிப்பெண்ணை அடிப்பது மட்டுமல்லாமல், பாத்திரங்களை உடைத்தது போன்ற தவறுகளுக்காக ஒவ்வொரு மாதமும் அவருடைய S$500 சம்பளத்தில், S$100 முதல் S$200 வரை ஜாவோ கழித்துள்ளார்.

சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த இளைஞர் கைது – போலிஸ் விசாரணை