ஆடவரை கொலைசெய்ததாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டு பணிப்பெண்… நீதிமன்றத்தில் ஆஜர்!

இந்தியப் பெண்ணை தீர்த்துக்கட்டிய வெளிநாட்டு பணிப்பெண் - கடும் கோபத்தில் செய்த கொடூர செயல்
(Photo: TODAY)

பீஷான் குடியிருப்பில் 73 வயது ஆடவர் ஒருவரை கொன்றதாக சந்தேகத்தின்பேரில் 49 வயதுமிக்க பணிப்பெண் மீது இன்று (ஏப்ரல் 30) ​​நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

பிளாக் 222, பீஷான் ஸ்ட்ரீட் 23ல் உள்ள குடியிருப்பு வீட்டில் திரு லோ ஹூன் சியோங் என்ற ஆடவரை கொலை செய்ததாக பணிப்பெண் சுமியாட்டி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் மேலும் ஒரு வெளிநாட்டு ஊழியர் கோர விபத்தில் பலி

இந்த சம்பவம் நேற்று முன்தினம் வியாழன் அன்று மாலை 4 மணி முதல் இரவு 8.46 மணி வரை மேற்கண்ட வீட்டில் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது.

அன்று இரவு 8.50 மணியளவில் பீஷான் ஸ்ட்ரீட் 23ல் உள்ள வீட்டில் மரணம் குறித்த புகார் வந்ததாக போலீசார் நேற்று தெரிவித்தனர்.

அதன் பின்னர் போலீசார் வந்து பார்த்தபோது, ​​ஆடவர் வீட்டுக்குள்ளே அசையாமல் கிடந்துள்ளார். பின்னர் அவர் உயிரிழந்தது மருத்துவ உதவியாளர்கள் மூலம் உறுதி செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து அவரின் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண் கைது செய்யப்பட்டார்.

இந்தோனேசிய நாட்டை சேர்ந்த அந்த பணிப்பெண், வீடியோ இணைப்பு வழியாக மாநில நீதிமன்றங்களில் ஆஜராகி, மொழிபெயர்ப்பாளர் மூலம் நீதிமன்ற நடவடிக்கைகளைப் பின்பற்றினார்.

கொலை தொடர்பான குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்க சிங்கப்பூர் சட்டத்தில் இடம் உண்டு.

தேக்காவில் திருட்டு… ART கருவிகளைத் திருடியதாக பிடிபட்ட இருவர்!