இந்தியப் பெண்ணை தீர்த்துக்கட்டிய வெளிநாட்டு பணிப்பெண் – கடும் கோபத்தில் செய்த கொடூர செயல்

இந்தியப் பெண்ணை தீர்த்துக்கட்டிய வெளிநாட்டு பணிப்பெண் - கடும் கோபத்தில் செய்த கொடூர செயல்
(Photo: TODAY)

சிங்கப்பூரில் இந்தியப் பெண்ணை தீர்த்துக்கட்டிய வெளிநாட்டு பணிப்பெண் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தனது முதலாளியின் 70 வயது மாமியாரான இந்திய பெண்ணை சுமார் 26 முறை கத்தியால் குத்தி உயிரை எடுத்ததாக பணிப்பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் எகிறும் வாடகை… “இனி முதலாளிகள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்” – MOM

அவர் மியான்மரைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண் என்றும், மேலும் அவர் சிங்கப்பூரில் வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதத்திற்கு பிறகு இந்த சம்பவம் நடந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

வீட்டில் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த 70 வயதான அந்த இந்தியப் பெண்ணை, Zin Mar Nwe என்ற அந்த பணிப்பெண் சுமார் 26 முறை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.

“ஏஜெண்டிடம் உன்னை திருப்பி அனுப்பி விடுவேன்” என்று கூறி பணிப்பெண்ணை அவர் மிரட்டியுள்ளார். இதனால் இந்த கொலை சம்பவம் நடந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு ஜனவரி 5, அன்று அவர் சிங்கப்பூருக்கு வந்ததாகவும், மேலும் அவரது பாஸ்போர்ட் அடிப்படையில் அப்போது அவரது வயது 23ஆக இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், சம்பவத்திற்குப் பிறகு நடந்த வயது பரிசோதனையில் குற்றத்தைச் செய்தபோது பணிப்பெண்ணுக்கு 17 வயது தான் என்பதும் நிரூபணமானது.

18 வயதிற்குட்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க சட்டத்தில் இடமில்லை என்பதால், அவருக்கு ஆயுள் தண்டனை மட்டுமே விதிக்கப்பட்டது.

மேலும் சட்டப்படி பெண்களுக்கு பிரம்படி தண்டனை விதிக்க முடியாது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்