குழந்தையை குப்பைத்தொட்டியில் கைவிட்ட வெளிநாட்டுப் பணிப்பெண்ணுக்கு சிறை..!

Maid jailed for abandoning her newborn baby in bin
Maid jailed for abandoning her newborn baby in bin (Photo: Pixabay)

தனது பிறந்த குழந்தையை சாலை ஓரத்தில் உள்ள குப்பைத்தொட்டியில் கைவிட்ட இந்தோனேசியப் பணிப்பெண் ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதில் 29 வயதான அந்த பணிப்பெண்ணுக்கு நேற்று வியாழக்கிழமை (நவ. 5) இந்த குற்றத்திற்காக ஐந்து மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இந்தமுறை புத்தாண்டு வாணவேடிக்கை இல்லை.

காணொளி ஆதாரங்கள்

காணொளி ஆதாரங்கள் மூலம் அவர் தாம்செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார், மேலும் குழந்தையை கைவிட்ட குற்றச்சாட்டில் அவர் ரிமாண்ட் செய்யப்பட்டார்.

அந்த பணிப்பெண் அடையாளம் சொல்லப்படாத இடத்தில் வீட்டு பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்ததாக நீதிமன்றம் கேட்டறிந்தது.

தன்னுடைய குழந்தையை கருக்கலைக்க மாத்திரைகள் அவர் எடுக்க முயன்றார், ஆனால் அது தோல்வியடைந்தது.

பிள்ளை பெற்றெடுப்பு

இந்த ஆண்டு ஜூலை 27ஆம் தேதி காலையில், அவர் தனது முதலாளியின் வீட்டில் கழிப்பறையில் தனது பிள்ளையை பெற்றெடுத்தார்.

அந்த பணிப்பெண் தனது குழந்தையை Tai Keng Garden-ல் உள்ள நீல நிறக் குப்பைத் தொட்டியில் கைவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காயப்படுத்தும் எண்ணம் இல்லை

தன்னுடைய குழந்தையை காயப்படுத்தும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், யாரேனும் வழிப்போக்கர்கள் பிள்ளையை கண்டுப்பிடிப்பார்கள் என்ற நம்பிக்கையில் வைத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரவு 7.45 மணியளவில், குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு, குடியிருப்பாளர்கள் சிலர் காவல்துறையிடம் புகார் செய்தனர்.

தண்டனை

12 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளை கைவிட்டால் 7 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் 3ஆம் கட்டத் தளர்வு: ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் நீடிக்கலாம்.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…