சிங்கப்பூரில் இந்தமுறை புத்தாண்டு வாணவேடிக்கை இல்லை..!

Fireworks New Year Marina Bay

சிங்கப்பூரில் புத்தாண்டு தினத்தை வரவேற்க மெரினா பே வட்டாரத்தில் பட்டாசு வாணவேடிக்கை இந்தமுறை இருக்காது என்று கவுண்டவுன் நிகழ்வின் அமைப்பாளர்கள் நேற்று (நவம்பர் 5) தெரிவித்தனர்.

COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியில் பொது சுகாதார அபாயங்கள் ஏற்படுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இந்த 2020ல் தற்கொலை சம்பவங்கள் குறைவு.

அதற்கு பதிலாக தீவு முழுவதும் பல்வேறு முக்கிய இடங்களில் வாணவேடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று மெரினா பே சிங்கப்பூர் கவுண்டவுன் 2021 அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இதில் புதிய ஆண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் இரண்டு கண்காட்சிகளை நகரச் சீரமைப்பு ஆணையம் (URA) வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் முதல், மரினா பே பகுதியில் இரவுதோறும் ஒளிக்காட்சிகள் இடம்பெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Fullerton Hotel, ArtScience Museum மற்றும் Merlion ஆகிய முக்கிய பகுதிகளில் அந்த ஒளிக்காட்சிகள் இடம்பெறும்.

சிங்கப்பூரில் 3ஆம் கட்டத் தளர்வு: ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் நீடிக்கலாம்.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…