சிங்கப்பூரில் இந்த 2020ல் தற்கொலை சம்பவங்கள் குறைவு..!

Photo Credit : The Economic Times

சிங்கப்பூரில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு தற்கொலை சம்பவங்கள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான நிலவரப்படி, மொத்தமாக 166 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

சிங்கப்பூரில் 139 வெளிநாட்டுப் பணிப்பெண்கள் கிருமித்தொற்றால் பாதிப்பு.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 304ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் இந்த ஆண்டு தற்கொலை முயற்சியை குற்றமற்றதாக்கும் குற்றவியல் சட்ட திருத்தம் அமலுக்கு வந்தது.

இந்த சட்டம், தற்கொலை முயற்சியின் எண்ணிக்கையை குறைத்துள்ளதா என்று புக்கிட் பாத்தோக் தொகுதியின் உறுப்பினர் முரளி பிள்ளை கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் திரு.டான் அவர்கள், ஜனவரி முதல் செப்டம்பர் வரை மொத்தம் 1,800 பேர் தற்கொலை எண்ணங்கள் உள்ளதாக கூறி காவல்துறையை உதவிக்கு அழைத்ததாக குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு முதல் S$1,000 வெள்ளி நோட்டுகள் வெளியீடு நிறுத்தம்.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…