சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு முதல் S$1,000 வெள்ளி நோட்டுகள் வெளியீடு நிறுத்தம்.!

Singapore discontinue S$1,000 note
Pic: Mothership

சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் S$1,000 வெள்ளி நோட்டுகள் வெளியிடுவதை சிங்கப்பூர் நாணய ஆணையம் நிறுத்தி உள்ளதாக அறிவித்துள்ளது.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவது, பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பது ஆகிய அபாயங்களைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இதுவரை நீண்டநாள் COVID-19 சம்பவங்கள் பதிவாகவில்லை – MOH

இதுகுறித்து, சிங்கப்பூர் நாணய ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது முதல் ஜனவரி வரை ஒவ்வொரு மாதத்திலும் 1000 வெள்ளி நோட்டுகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும் என்றும், வங்கிகளில் வைப்புத்தொகையாக உள்ள 1,000 வெள்ளி நோட்டு தொடர்ந்து பயன்படுத்தி வரலாம் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், 1,000 வெள்ளி நோட்டுகளின் தேவையை ஈடுசெய்ய 1,000 வெள்ளிக்குப் பிறகு, அதிக மதிப்புடைய 100 வெள்ளி நோட்டுகள் போதுமான அளவுக்கு புழக்கத்தில் இருக்கும் என்று ஆணையம் கூறியுள்ளது.

தற்பொழுது புழக்கத்தில் உள்ள 1,000 வெள்ளி நோட்டுகளை கட்டணம் செலுத்துவதற்குத் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றும், அவை சட்ட விதிமுறைக்கு உட்பட்டவை என்றும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

தங்கும் விடுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் இருவருக்கு கிருமித்தொற்று..!

பொதுமக்கள் அதிக மதிப்புடைய நோட்டுகளுக்குப் பதிலாக மின்கட்டண முறையைப் பயன்படுத்துமாறு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…