சிங்கப்பூரில் இதுவரை நீண்டநாள் COVID-19 சம்பவங்கள் பதிவாகவில்லை – MOH

No reports of 'long COVID' cases in Singapore so far: MOH
No reports of 'long COVID' cases in Singapore so far: MOH (Photo: Reuters)

சிங்கப்பூரில் இதுவரை நீண்டநாள் COVID-19 பற்றிய எந்த சம்பவங்களும் சுகாதார அமைச்சகத்திற்கு கிடைக்கவில்லை என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்ற பதிலில் தெரிவித்தார்.

இந்த நீண்டநாள் COVID-19 என்பது, ஒரு நபர் குணமடைந்த பிறகு நோய்த்தொற்றின் நீடித்த அறிகுறிகளை குறிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் இரண்டு பேர் சண்டை போடுவது போன்ற காணொளி வைரல்…காவல்துறை விசாரணை.

நீண்டகால COVID-19 சம்பவம் பற்றி தெளிவான விளக்கம் இல்லை என்றும், மேலும் அது தொடர்பான ஆய்வுகள் நடந்து வருவதாகவும் திரு. கான் குறிப்பிட்டார்.

இதில் பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹீ டிங் ருவின் (He Ting Ru) கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

அதில் சிங்கப்பூரில் நீண்டநாள் COVID-19 தொடர்பான ஏதேனும் பதிவு அல்லது சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் ஏதேனும் உள்ளதா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

COVID-19இன் நீண்டநாள் விளைவுகள் குறித்தும் தொடர்ந்து கண்காணிப்போம் என்றும் அவர் கூறினார்.

மற்ற நாடுகளில் உள்ள நோயாளிகளுக்கு, கடுமையான சோர்வு, மூச்சுத் திணறல், மூட்டு வலி மற்றும் பிற அறிகுறிகள் பதிவாகியுள்ளன.

இது COVID-19லிருந்து குணமடைந்த சில வாரங்கள் அல்லது மாதங்களுக்குப் பிறகு ஏற்படக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

லிட்டில் இந்தியாவில் உள்ள உணவகத்தின் சமையலறையில் சடலம்.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…