தங்கும் விடுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் இருவருக்கு கிருமித்தொற்று..!

COVID-19 cases in Singapore
(Photo: TODAY)

சிங்கப்பூரில் நேற்றைய நிலவரப்படி, புதிதாக 9 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

அதில் 2 பேர் தங்கும் விடுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் ஆவார்கள். மீதமுள்ள 7 பேர் வெளிநாடுகளிலிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் இரண்டு பேர் சண்டை போடுவது போன்ற காணொளி வைரல்…காவல்துறை விசாரணை.

தங்கும் விடுதி

தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் வழக்கமான இரு வார சோதனை மூலம் அந்த இருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டது.

இந்தியாவில் இருந்து வந்தவர் பாதிப்பு

வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களில், இந்தியாவில் இருந்து வந்த நிரந்தரவாசி ஒருவரும் இதில் பாதிக்கப்பட்டுள்ளார்.

வெளிநாடுகளிலிலிருந்து சிங்கப்பூர் வந்த அனைவரும் சிங்கப்பூர் வந்ததில் இருந்து, வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவின்கீழ் தனிமையில் வைக்கப்பட்டனர்.

சிங்கப்பூரில் நேற்றைய நிலவரப்படி, கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 58,029ஆக உள்ளது.

குணமடைந்தோர்

அதே போல, சிங்கப்பூரில் 57,937 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லிட்டில் இந்தியாவில் உள்ள உணவகத்தின் சமையலறையில் சடலம்.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…